அறந்தாங்கி ரயில் நிலையத்தில் நடைமேடையில் புதிய நிழற்குடை அமைப்புUTS APP மூலமாக QR Code முறையில் பொதுபெட்டியில் (Unreserved) டிக்கெட் எடுத்து பயணிக்கும் வசதி அறிமுகம்



 அறந்தாங்கி ரயில் நிலையத்தில்  நடைமேடையில் புதிய நிழற்குடை அமைப்பு  QR Code முறையில் பொதுப்பெட்டியில்   டிக்கெட் எடுத்து பயணிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பர்மா(தற்போதைய மியான்மர்) நாட்டில் காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட செட்டிநாட்டு பகுதிகளைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் பெரிய அளவில் வணிகம் செய்து வந்தனர். இவர்கள் பொருள்களை கொண்டு செல்லவும், ஊர் வந்து சேரவும் தங்கள் பகுதிக்கு சென்னையில் இருந்து ரயில் வசதி செய்து தருமாறு ஆங்கிலேய அரசை வலியுறுத்தினர். நாட்டுக்கோட்டை நகரத்தாரின் தீவிர முயற்சியின் பலனாக ஆங்கிலேய அரசின் சவுத் இந்தியன் ரயில் கம்பெனி மூலம் திருவாரூரில் இருந்து  திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி வழியாக காரைக்குடிக்கு மீட்டர் கேஜ் ரயில்பாதை அமைக்கப்பட்டது. இந்த ரயில் பாதையில் கடந்த 1902ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில்மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு மாணவ, மாணவியர் சென்று படித்து வந்தனர். இந்த நிலையில் நாடு முழுதும் மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் அகலரயில் பாதைகளாக மாற்றம் செய்யப்பட்டன. இதேப்போல இந்த வழித்தடத்தில் காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி இடையே 187 கி.மீ தூரமுள்ள மீட்டர் கேஜ் ரயில்பாதையை அகலரயில்பாதையாக மாற்ற ரூ.1700 நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த 2012ம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது. இதனால் 1902-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ந் தேதி முதல் மீட்டர் கேஜ் ரயில் பாதையில் இயங்கிய ரயில், 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது.

மயிலாடுதுறை-திருவாரூா்- காரைக்குடி இடையிலான 187 கி.மீ. தொலைவு கொண்ட ரயில் பாதை, ஆங்கிலேயா் காலத்தில் அமைக்கப்பட்ட மிகப் பழைமையான ரயில் பாதையாகும். 

1894-இல் மயிலாடுதுறை- முத்துப்பேட்டை, 

1902-இல் முத்துப்பேட்டை- பட்டுக்கோட்டை, 

1903-இல் பட்டுக்கோட்டை -அறந்தாங்கி, 

1952-இல் அறந்தாங்கி - காரைக்குடி 

என படிப்படியாக ரயில் சேவை தொடங்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களைச் சோ்ந்த மக்களுக்கு இந்த ரயில் சேவை மிகுந்த பயனளித்தது.

இந்நிலையில், அகல ரயில் பாதைப் பணிக்காக, 2006-ஆம் ஆண்டில் மயிலாடுதுறை-காரைக்குடி வரையிலான பாதையில் சென்னைக்கான ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், 2012-இல் பட்டுக்கோட்டை- காரைக்குடி, திருவாரூா்-பட்டுக்கோட்டை இடையிலான ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.
பின்பு அகலபாதையாக மாற்றப்பட்டு தற்போது நிலவரப்படி 
அறந்தாங்கி வழியாக மொத்தம் மூன்று ரயில்கள் செல்கிறது 

அறந்தாங்கி ரயில் நிலையம் (ATQ)

தற்போது அறந்தாங்கி ரயில் நிலையத்தில் 3 ரயில்கள் செல்கின்றன. 

திருவாரூர் - காரைக்குடி - திருவாரூர் (வாரத்தில் 5 நாட்கள்) , 
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் (வாரத்தில் ஒரு நாள்)
செகந்திராபாத் - இராமேஸ்வரம் - செகந்திராபாத் (வாரத்தில் ஒரு நாள்) 



அறந்தாங்கி இரயில் நிலையம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. அறந்தாங்கி இரயில் நிலையத்திற்கு அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து கல்லுப்பட்டறை சாலை வழியாக சென்றால் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த இரயில் நிலையம்.





அறந்தாங்கி இரயில் நிலையத்திற்கு அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதிகளும் உண்டு. இந்த இரயில் நிலையம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம், ஆலங்குடி, அரிமளம், மறமடக்கி, சிலட்டூர், ஆவுடையார்கோவில், மீமிசல், மணல்மேல்குடி, கோட்டைப்பட்டினம், கட்டுமாவடி,ஏம்பல், கிழாநிலை போன்ற பேரூராட்சி மற்றும் வருவாய் கிராம மக்கள் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தும் ஒரு இரயில் நிலையம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இரண்டாவது பெரிய இரயில் நிலையம்.
மூன்று நடைமேடை கள் மற்றும் 4 இரயில் தண்டவாளங்கள் அமைந்துள்ளது. மீட்டர் கேஜ் பாதையில் இரயில் இயங்கிய போது அறந்தாங்கி இரயில் நிலையத்திற்கு திருப்பெருந்துறை என்றே பயணச்சீட்டு வழங்கப்பட்டது..

QR CODE

அதுபோல UTS செயலி மூலமாக QR Code முறையில் பொதுப்பெட்டியில் (Unreserved) டிக்கெட் , நடைமேடை டிக்கெட்  எடுத்து பயணிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது





பயணிகள் நிழற்குடை

பயணிகள் வசதிக்காக இரண்டாவது மற்றும் மூன்றாவது நடைமேடையில் இரண்டு பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.. 





பயணிகளின் கோரிக்கை.

முதலாவது நடைமேடையில் கொரோனா வார்டாக மாற்றப்பட்ட இரயில் பெட்டிகள் நிற்கிறது இதனால் பயணிகள் பயன்படுத்தும் இரயில் இரண்டாவது நடைமேடையில் வருகிறது இதனால் பயணிகள் மற்றும் வயதான பெரியவர்கள் இரண்டாவது நடைமேடைக்கு செல்ல மிகுந்த சிரமமாக உள்ளது எனவே முதல் நடைமேடையில் உள்ள கொரோனா வார்டாக மாற்றப்பட்ட இரயில் பெட்டிகளை மூன்றாவது நடைமேடையின் அருகில் உள்ள 4 வது இரயில் தண்டவாளத்தில் நிறுத்தி வைக்க பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.



புகைப்படங்கள் உதவி: அறந்தாங்கி முருகானந்தம் சுப்பிரமணியன் 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments