திருப்புனவாசல் அருகே பறையாத்தூர் கிராமத்தில் மின்னல் தாக்கி இறந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவியை வழங்கினார் அமைச்சர் ரகுபதி!ஆவுடையார்கோவில் தாலுகா திருப்புனவாசல் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் தென்னரசு (எ) சஞ்சய், 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவி காளீஸ்வரி (எ) சஞ்சனா ஆகியோர் தங்களது சித்தப்பா இளையராஜா (வயது 38) என்பவருடன் கடந்த 14-ந் தேதி பள்ளி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பறையாத்தூர் கிராமத்தில் மின்னல் தாக்கி அவர்கள் 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இதையடுத்து, பலியான 3 பேரின் குடும்பத்தினருக்கும் தமிழக அரசு சார்பில் பேரிடர் நிவாரண நிதியாக தலா ரூ.4 லட்சம் வீதம் மொத்தம் ரூ.12 லட்சத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார். பின்னர் அமைச்சர் கூறுகையில் தமிழக முதல்- அமைச்சரின் ஆணைக்கிணங்க 24 மணி நேரத்தில் இறந்தவர்களுக்கு வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. 

மேலும் இயற்கை பேரிடர் நிதியும் உடனடியாக வழங்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இளையராஜாவின் மனைவிக்கு முதல்-அமைச்சரிடம் பேசி மாவட்ட நிர்வாக ஒப்புதலுடன் கருணை அடிப்படையில் அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறினார். 

இந்தநிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, ஆவுடையார் கோவில் ஒன்றியக் குழுத்தலைவர் உமாதேவி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments