பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி விட்டுச்சென்ற ரூ.8.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் ஒப்படைப்பு!காரைக்குடியில் இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று பிற்பகல் 12 மணி அளவில் எழும்பூர் ரெயில் நிலையம் வந்தடைந்தது. எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும், அதில் இருந்து பயணிகள் இறங்கிச்சென்றனர்.

அப்போது, அந்த ரெயிலில் பெட்டி ஒன்று கிடந்தது. இதை பார்த்த ரெயில்வே பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் நீரஜ்குமார் பஸ்வான், அந்த பெட்டியை மீட்டு, உயர் அதிகாரியிடம் ஒப்படைத்தார். இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஜி.சாய்லீலா முன்னிலையில் அந்த பெட்டி திறக்கப்பட்டது. 

அதில், பழைய துணிமணிகள், தங்க நெக்லஸ், காது மாட்டி, கம்மல், மோதிரம் என சுமார் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 22 பவுன் தங்க நகைகள் இருந்தது. பின்னர் இந்த நகைகள் வைத்திருந்த பெட்டியை, மதுரை அன்புநகரை சேர்ந்த ஜாபர் அலி என்பவரின் மனைவி ஜரினா விட்டுச்சென்றது தெரிய வந்தது.

உரிய விசாரணைக்கு பின்னர் பெட்டியில் இருந்த நகைகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments