மல்லிப்பட்டினம் சமுதாய நல மன்றம் சார்பில் முக்கிய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி கோரி மாவட்ட ஆட்சியருக்கு மனு!தஞ்சாவூர் மாவட்டம் , சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில் மக்களின் நலன் கருதி கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டி மனு மல்லிப்பட்டினம் சமுதாய நல மன்றம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,

எங்கள் ஊராட்சியில் 10000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இவ்வூர் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமான மனோரா சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில் தான் அமைந்துள்ளது. எங்கள் ஊர் மக்களின் நலன் கருதி கீழ்கண்ட முக்கிய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தா தங்களை பணிந்து கேட்டுக் கொள்கிறோம்.

1. 29-10-2022 அன்று மனோரா மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் சாலை முனையில் பள்ளி வாகனம் விபத்துக்கு உள்ளாகி சம்பவம் இடத்திலேயே பள்ளி தாளாளர் மற்றும் பள்ளி ஆசிரியரை பரிதாபமாக உயிர் இழந்தார்கள். ஆகையால் சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில் அமைந்துள்ள மனோராவையும் கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் சாலை முகப்பு மற்றும் மனோரா வளைவு (Arch) குளம் அருகே வாகனங்களின் வேகத்தை குறைக்கும் விதமாக தடுப்பணை (Barricade அமைத்து தர வேண்டும்.

2. அதே போல் மல்லிப்பட்டினம் பேருந்து நிறுதத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டாம்புளிக்காடு சாலை மற்றும் மல்லிப்பட்டினம் கடற்கரை செல்லும் சாலை ஆகியவை ஒன்றாக இணைகிறது. இதன் அருகே தான் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அதிகமாக கூடும் இடம் பொது மக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி இந்த பகுதியிலும் தடுப்பணை (Barricade) அமைத்து தர வேண்டும்.

3. தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களை ஓட்டி வரும் வாகன ஓட்டிகளை துரத்தி செல்வதால் நிலைதடுமாறி விபந்து ஏற்படுகிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments