திருவாரூர் காரைக்குடி ரயில் வழிதடத்தில் பல்வேறு ரயில் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி -நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை..


திருவாரூர் காரைக்குடி ரயில் வழிதடத்தில் பல்வேறு ரயில் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி -நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் 

பொருள் : மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி கீழ்கண்ட் கோரிக்கைகளை மாண்புமிகு ஒன்றிய ரயில்வே அமைச்சர் அவர்களிடம் வலியுறுத்தி நிறைவேற்றி தர பணிந்து கோருதல் சார்பு.

மாற்றுத்திறனாளிகள் பயணம் மேற்கொள்வதற்கு உகந்து போக்குவரத்து ரயில் போக்குவரத்து ஆகும். எங்களின் நலன் கருதி கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர தங்களை பணிந்து வேண்டுகிறோம்.

1. திருவாரூர் - காரைக்குடி ரயில் வழித்தடம் அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக கடந்த 2012 ஆம் வருடம் இவ்வழித்தடத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அப்போது இவ்வழித்தடத்தில் பணிபுரிந்து வந்த கேட் கீப்பர்கள் வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டார்கள். கடந்து 2019 ஆம் ஆண்டு அகல ரயில் பாதை அமைக்கும் பணி முடிந்தும் இதுநாள் வரை இவ்வழித்தடத்தில் இரவு நேர கேட் கீப்பர்கள் நியமிக்கப்படவில்லை பகல் நேர கேட் கீப்பர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார்கள். உடனடியாக இரவு கேட் கீப்பர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்கு முன்பாக இவ்வழித்தடத்தில் தினசரி ரயிலாக சென்னைக்கு இயங்கி வந்த கம்பன் விரைவு மீண்டும் இவ்வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. இவ்வழித்தடத்தில் தெற்கு ரயில்வே மூலம் வாரம் முன்று முறை இயக்குவதற்கு ரயில் வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்பட்ட தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயிலை உடனடியாக இயக்க ஆவணம் செய்ய வேண்டும்.

4. இவ்வழித்தடத்தில் சோழன் விரைவு ரயிலுடன் இணைக்கு விதமாக தெற்கு ரயில்வே மூலம் தினசரி ரயிலாக இயக்குவதற்கு ரயில் வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்பட்ட காரைக்குடி மயிலாடுதுறை விரைவு ரயிலை உடனடியாக இயக்க ஆவணம் செய்ய வேண்டும்.

5. டெல்டா மாவட்டத்தை தமிழ் சங்கம் அமைந்துள்ள மதுரை மாவட்டத்துடன் இணைக்கும் விதமாக சென்னை எழும்பூரிலிருந்து விழுப்புரம் மயிலாடுதுறை திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி மானாமதுரை வழியாக மதுரைக்கு பகல் நேர தினசரி விரைவு ரயில் சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. தற்போது கேரள மாநிலத்தையும் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டத்தையும் இணைக்கும் விதமாக திருவாரூர்-காரைக்குடி ரயில் வழித்தடத்தில் வாரம் ஒரு முறை இயங்கி வரும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயிலை நிரந்தர தினசரி ரயிலாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7. பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது அதை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8. பட்டுக்கோட்டை - மன்னார்குடி புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் கிடப்பில் கிடக்கிறது அதை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments