புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக செயலாற்றும் கிராம ஊராட்சிகள் "உத்தமர் காந்தி விருது" பெற விண்ணப்பிக்கலாம்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக செயலாற்றும் கிராம ஊராட்சிகள் "உத்தமர் காந்தி விருது" பெற விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தகவல் 

கிராம ஊராட்சித் தலைவர்களின் தலைமைப் பண்பினை வெளிக்கொணரும் வகையிலும், ஊராட்சிகளில் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும் புதுமையான முயற்சிகள் எடுத்து மிக சிறப்பாக பணியாற்றியுள்ள கிராம ஊராட்சித் தலைவர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், அரசாணை (நிலை) எண்.111, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (சி2) துறை, நாள்:05.09.2006-இன்படி உத்தமர் காந்தி விருது அறிவிக்கப்பட்டு 2006-07 முதல் 2009-10-ஆம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் வருடத்திற்கு 15 விருதுகள் வீதம் 60 கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு நற்சான்றிதழ், கேடயம் மற்றும் ரூ.5 இலட்சத்திற்கான வெகுமதியுடன் உத்தமர் காந்தி விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு வந்தநிலையில் இடையில் இவ்விருது பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இவ்வாண்டு முதல் மீண்டும் "உத்தமர் காந்தி விருது' மாவட்டத்திற்கு ஒன்று வீதம், சிறந்த 37 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.10 இலட்சம் வீதம் ரூ.3.70 கோடி ரூபாய் செலவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், புதுமையான முயற்சிகள் எடுத்து மிக சிறப்பாக பணியாற்றியுள்ள கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் பொருட்டும், நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals) அடையும் கிராம ஊராட்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில் சிறந்த கிராம ஊராட்சிகள் தேர்வு செய்திட ஏதுவாக உரிய கருத்துருக்களை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ)-இன் வாயிலாக அனுப்பி வைத்திட அனைத்து கிராம ஊராட்சி மன்றத்தலைவர்களை கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு வரப்பெறும் கருத்துருக்கள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு தகுதியான கிராம ஊராட்சிகளுக்கு விருது வழங்கிட பரிந்துரை செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், புதுக்கோட்டை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments