கடலோர பகுதியில் பயங்கரவாத ஊடுருவலை தடுக்கும் விதமாக 6 மாதங்களுக்கு ஒரு முறை சாகர் கவாச் என்ற பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும்.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம், போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், கடலோர பகுதியில் நேற்றும், இன்றும் (புதன்கிழமை) ஆகிய 2 நாட்கள் ஒத்திகை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கடல் வழியே பயங்கரவாதிகள் ஊடுருவி வந்தால் அவர்களை எவ்வாறு தடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
சோதனைச்சாவடி இதேபோல் கடலோர பகுதிகளான கட்டுமாவடி, மும்பாலை, ஆதிப்பட்டினம், கோட்டைப்பட்டினம், பாலக்குடி, மீமிசல் ஏம்பக்கோட்டை, அரசங்கரை ஆகிய 7 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து அவ்வழியே வரும் வாகனங்களை சோதனை செய்து அவர்கள் வாகனத்தின் பதிவு எண்களை பதிவு செய்த பின்னரே வாகனம் செல்ல அனுமதிக்கின்றனர்.
படகுகளில் சோதனை கடலோர காவல் குழுமத்தினர் தங்கள் ரோந்து படகின் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித்து வரும் படகுகளை சோதனை செய்கின்றனர். பின்னர் படகிற்கு பதிவெண் உள்ளதா மற்றும் மீனவர்களுக்கு அடையாள அட்டை உள்ளதா என்று சரிபார்த்த பின்னரே படகுகள் செல்ல அனுமதிக்கின்றனர். சந்தேகம்படும்படி யாரேனும் தென்பட்டால் உடனே தகவல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பரபரப்பு இந்த ஒத்திகையில், போலீசார், கடலோர காவல் குழுமத்தினர், கடலோர காவல் படையினர், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுகின்றனர். திடீரென கடலோர பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள சம்பவத்தால் கடலோர பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டது.
மணமேல்குடி கடலோர பகுதியில், கடலோர பாதுகாப்பு ஒத்திகை கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. இதில், கடல் வழியாக பயங்கரவாத ஊடுருவல்களை தடுப்பது, சமூக விரோத செயல்களை தடுப்பது மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தடுப்பதற்கான ஒத்திகை நடைபெற்றது. இதில் போலீசார் பாண்டியன், மணிகண்டன் மற்றும் ஊர்க்காவல் படையினர், கடலோர பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.