தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சம்பா சாகுபடிக்கு சரக்கு ரெயிலில் வந்த உரம்



 
 




புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

சம்பா சாகுபடிக்கு தேவையான யூரியா 3,471 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1,237 மெட்ரிக் டன், பொட்டாஷ் 862 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 5,694 மெட்ரிக் டன்களும் இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு கடன் சங்க விற்பனை நிலையங்கள் மூலமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடியிலிருந்து தற்போது ஸ்பிக் யூரியா 724 மெட்ரிக் டன்கள், மேலும் காம்ப்ளக்ஸ் 502 மெட்ரிக் டன்கள், சூப்பர் 63 மெட்ரிக் டன்கள் ஆகியவை சரக்கு ரெயிலில் புதுக்கோட்டை வந்து சேர்ந்தது. இங்கிருந்து புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு உரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 694 மெட்ரிக் டன் யூரியா, 502 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 53 மெட்ரிக் டன் சூப்பர் உரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குனர் மதியழகன், தரக்கட்டுப்பாடு வேளாண்மை அலுவலர் முகமது ரபி, ஸ்பிக் நிறுவன அலுவலர்களும் உடனிருந்தனர். 

உரிமம் ரத்து செய்யப்படும் உரம் தங்கு தடையின்றி கிடைத்திடவும், உரிய விலையில் விற்பனை செய்வதை உறுதிப்படுத்திடவும், வேளாண்மைத்துறை மூலம் அவ்வப்போது உர ஆய்வாளர்கள் மூலம் அனைத்து வட்டாரங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து சில்லறை உர உரிமைதாரர்கள் உரக்கட்டுப்பாடு ஆணை 1985-இன்படி உள்ள விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். உரங்களை பிற மாவட்டங்களுக்கு அனுப்பக்கூடாது. உரங்களை, உர மூட்டையின் மேல் காணப்படும் அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்தாலோ, விற்பனை உரிமத்தில் உரிய அனுமதியின்றி பெறப்பட்ட நிறுவனத்தின் உரங்களையோ, உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர வேறு இடத்தில் இருப்பு வைத்து விற்பனை செய்தாலோ உர உரிமம் ரத்து செய்யப்படும்.

 ரசீதுகளை கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும் விவசாயிகள் உரம் வாங்க செல்லும்போது தங்கள் சாகுபடிக்கு தேவையான உரங்களை தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி பெற்றுக் கொள்ளுமாறும், கட்டாயமாக உரங்களுக்கான ரசீதுகளையும் கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். எனவே, புதுக்கோட்டை மாவட்ட சில்லறை உர விற்பனையாளர்கள் உரக்கட்டுப்பாட்டு ஆணையின்படி, உர விற்பனை செய்ய வேண்டும். ஆய்வின்போது குறைபாடுகள் ஏதும் கண்டறியப்பட்டால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments