அறந்தாங்கி அக்கியூ எலீட் இரத்த பரிசோதனை நிலையம் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி இணைந்து நடத்திய இலவச உடல் பரிசோதனை முகாம்!அறந்தாங்கி அக்கியூ எலீட் இரத்த பரிசோதனை நிலையம் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி இணைந்து இலவச உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அக்கியூ எலீட் இரத்த பரிசோதனை நிலையம் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி இணைந்து நேற்று 6.11.2022 இலவச உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி தலைமையில் விவசாய அணி மாநில துணை செயலாளர் சேக்இஸ்மாயில் முன்னிலையில் அறநகர் மன்ற தலைவர் இரா ஆனந்த் இலவச முகாமை துவக்கிவைத்தார். வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் பா வரதராஜன் சிறப்புரையாற்றினார். அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டாரி கிளப் தலைவர் விகாஸ் சரவணன் முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ் அட்டைகளை வழங்கினார். அக்கியூஎலீட் பரிசோதனை நிலைய மருத்துவர் ரகு கனகசபை தலைமையில் மருத்துவ உதவியாளர்கள் அமுதா, பஹத், ஜாபர் அலி ஆகியோர் முகாமில் கலந்துகொண்ட 250க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இரத்த அழுத்தம், ஹீமோகுளோபின், கொழுப்பு அளவு, சர்க்கரை அளவு, சாப்பாட்டிற்கு முன்/பின், சீரம் கிரியேட்டினேன், பில்லுரூபின் ஆகிய இலவச உடல் பரிசோதனைகளை செய்து கொடுத்தனர்.
இம்முகாமில் உதவும் கரங்கள் தொண்டு நிறுவனம் மாவட்ட தலைவர் இஓஎஸ் சலீம், 2-வது வார்டு கவுன்சிலர் துளசிராமன், 23வது வார்டு கவுன்சிலர் அசாரூதீன், 25வது வார்டு கவுன்சிலர் நசிரூ தீன், 26வது வார்டு கவுன்சிலர் மகாராணி அஜ்மீர், தி ஃபோர்ட் சிட்டி ரோட்டாரி கிளப் செயலாளர் கணேசன், பொருளாளர் கண்ணன், கலாச்சார பேரவை மாவட்ட துணை செயலாளர் அப்துல் அமீது, அலுவலக செயலாளர் ரியாஸ் அகமது, தொழிற்சங்க செயலாளர் ஜகுபர் சாதீக் மற்றும் ஹாஜி முகம்மது ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னதாக மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி அனைவரையும் வரவேற்றார். இறுதியில் கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது அனைவருக்கும் நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments