துரையரசபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள்!துரையரசபுரத்தில் கூட்டுறவு நூற்பாலை முன் தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

ஆவுடையார்கோவில் போலீஸ் சரகம் துரையரசபுரத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலை முன் ஆவுடையார்கோவில்-அறந்தாங்கி சாலையில் தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் கருணா தலைமையில், அண்ணா தொழிற்சங்க தலைவர் மாதவன், தொ.மு.ச., பி.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 8 மணி நேர பணியில் தற்போது 80 கிலோ நூல் எடுப்பதை 110 கிலோ எடுக்க சொல்வதாக கூறியும், ஒப்பந்த பணிகளை தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்ததை கண்டித்தும் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து நூற்பாலை மேலாளர் வெங்கடேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மில் நிர்வாகத்தினர் 30-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதால், அதுவரை 80 கிலோ நூல் எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments