அறந்தாங்கி பட்டுக்கோட்டை வழியாக செல்லும் எர்ணாகுளம் (கொச்சி) - வேளாங்கண்ணி இடையே இயக்கப்படும் வாரந்திர சிறப்பு ரயில் சேவை நேரத்தில் மாற்றம்: மாற்றப்பட்ட புதிய அட்டவணை வெளியீடு







அறந்தாங்கி பட்டுக்கோட்டை வழியாக செல்லும் எர்ணாகுளம் (கொச்சி) - வேளாங்கண்ணி இடையே இயக்கப்படும் வாரந்திர சிறப்பு ரயில் சேவை நேரத்தில் மாற்றம்: மாற்றப்பட்ட புதிய அட்டவணை  வெளியிடப்பட்டுள்ளது.

எர்ணாகுளம் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் ரயில் சேவை நேரத்தில் புதிய அட்டவணை மாற்றப்பட்டு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது . நவம்பர் 26ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது 

06035 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி

இந்த வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒவ்வொரு சனிக்கிழமை பகல் 01.10 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

காரைக்குடி (12.50/12.55)
அறந்தாங்கி (01.23/01.24), 
பேராவூரணி  (01.48/01.49)
பட்டுக்கோட்டை (02.10/02.12), 
அதிராம்பட்டினம் (02.27/02.28),
திருத்துறைப்பூண்டி  (03.00/03.02), 
திருவாரூர் (03.40/03.50),

06036 வேளாங்கண்ணி - எர்ணாகுளம்

மறுமார்க்கத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை 6.40 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு ஒவ்வொரு திங்கட்கிழமை பகல் 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்

திருவாரூர் (19.50/20.00), 
திருத்துறைப்பூண்டி  (20.32/20.34), 
அதிராம்பட்டினம் (21.09/21.10),
பட்டுக்கோட்டை (21.25/21.27), 
பேராவூரணி  (21.48/21.49)
அறந்தாங்கி (22.16/22.18), 
காரைக்குடி (23.00/23.05)

எங்கெங்கு நின்று செல்லும்?







இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில், எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோட்டையம், செங்கனாசேரி, திர்வல்லா, செங்கனூர், மவெலிகரா, காயங்குளம், கருநாகப்பள்ளி , சாஸ்தன்கோட்டா, கொல்லம், குந்தரா, கொட்டாரகர, புணலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி , பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments