ஹைதராபாத் வாழ் தமிழர்களின் நலன் கருதி "சார்மினார் ரயிலை ஹைதராபாத்தில் இருந்து கன்னியாகுமரி வரை இயக்கவும்" ரயில்வேக்கு பரிந்துரைத்த தமிழிசை!



ஹைதராபாத் வாழ் தமிழர்களின் நலன் கருதி சென்னை தாம்பரம் வரை இயங்கும் சார்மினார் ரயிலை திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரி வரை இயங்க வேண்டும் என்ற தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் கோரிக்கையை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ரயில்வேக்கு பரிந்துரைத்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சென்னை தாம்பரம் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் சார்மினார் எக்ஸ்பிரஸ்.

இந்த ரயிலில் சென்னையை சேர்ந்த தெலுங்கனா வாழ் தமிழர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களும் அதிகம் பயணித்து வருகின்றனர்.
ஆனால் இந்த சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் ஹைதராபாத்தில் இருந்து சென்னை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படுவதால் தென் மாவட்டங்களில் வசிப்பவர்கள் சென்னை தாம்பரம் வரை வேறொரு ரயிலில் வந்தடைந்து அதன்பிறகு சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்து தெலுங்கானா சென்றடைகின்றனர். எனவே இந்த ரயிலை தெலுங்கானாவில் இருந்து சென்னை, திருச்சி மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை இயக்க நீண்ட நாட்களாக மக்கள் கோரிக்கை அனுப்பி வருகின்றனர்.

தென் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் இது தொடர்பாக நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். தென் மாவட்டங்களிலிருந்து தெலுங்கானா தலைநகரான ஹைதராபாத்துக்கு நேரடி தினசரி ரயில் இல்லை. திருநெல்வேலி, மதுரை, திருச்சி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்புக்காக ஹைதராபாத்துக்கு சென்று வருகின்றனர். இவர்கள் தற்போது சென்னை சென்று அங்கிருந்து மாலையில் புறப்படும் ரயிலில்தான் ஹைதராபாத் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பகல் முழுவதும் பயணிகளின் நேரம் வீணாகிறது.

கன்னியாகுமரியிலிருந்து சென்னை, மும்பை, பெங்களூரு, மங்களூரு, கோவைக்கு தினசரி ரயில்கள் இயக்கப்பட்டாலும், ஐதராபாத்துக்கு மட்டும் வாராந்திர ரயில் சேவை தான் தற்போது உள்ளது. நாகர்கோவிலில் இருந்து கச்சிகுடாவிற்கு 2014-ஆம் ஆண்டு முதல் வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது. எனவே கன்னியாகுமரியில் இருந்து மதுரை, திருச்சி வழியாக ஹைதராபாத்துக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என மாவட்ட ரயில்கள் பயணிகள் சங்கத்தினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் கோரிக்கை அனுப்பியுள்ளனர்.

மேலும் அதில் ஹைதராபாத்தில் மாலை 6.00 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னை தாம்பரம் வந்தடையும். அங்கிருந்து காலை 8.00 மணிக்கு புறப்பட்டு இரவு 8.00 மணிக்கு கன்னியாகுமரி செல்லும். மறுமார்க்கத்தில் அங்கிருந்து காலை 6.00 மணிக்கு புறப்பட்டு மாலை 6.00 மணிக்கு சென்னை தாம்பரம் சென்றடையும். அங்கிருந்து மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.50 மணிக்கு ஹைதராபாத் செல்லும் வகையில் கால அட்டவணை அமைக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த கோரிக்கையை ஏற்று ரயில்வே நிர்வாகம் தக்க பரிசீலனை செய்து சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க ஆவன செய்ய வேண்டுகிறோம்‌. என்று கூறப்பட்டுள்ளது.

ஹைதராபாத் வாழ் தமிழர்களின் நலன் கருதி ஹைதராபாத்தில் இருந்து சென்னை தாம்பரம் வரை இயங்கும் சார்மினார் ரயிலை திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை கடிதத்தை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ரயில்வே துறைக்கு பரிந்துரைத்துள்ளார். ரயில்வேக்கு பரிந்துரைத்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தெலுங்கானா தமிழ்ச்சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments