இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து சென்னைக்கு SETC விரைவு பேருந்து சேவை தொடங்குவது,
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி மக்கள் பயன்படுத்திவந்த கொரோனா பேரிடர் காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து அரசு பேருந்துகளையும் மீண்டும் இயக்குவது, ராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து புதிய பேருந்து சேவை இயக்குவது,
திருப்பாலைக்குடி பகுதியில் ஸ்டேஜ் அமைத்து பேருந்து கட்டணத்தை குறைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான கே நவாஸ்கனி எம்பி போக்குவரத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதி மக்கள் அறந்தாங்கியில் இருந்து சென்னை வரை இரு மார்க்கமும் படுக்கை வசதி கொண்ட விரைவு பேருந்து இயக்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
எனவே அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதி மக்களின் கோரிக்கையை பரிசீலித்து,
அறந்தாங்கியில் இருந்து சென்னை வரை இரு மார்க்கமும் படுக்கை வசதி கொண்ட விரைவு பேருந்து சேவை (SETC) இயக்க உரிய நடவடிக்கை எடுக்க உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கை கருத்தில் கொண்டு நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது மீண்டும் இயங்க ஆரம்பித்த பேருந்து சேவையில் சில குறிப்பிட்ட வழித்தடங்களில் பேருந்துகள் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இயங்காமலேயே இருப்பதாக தொகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து பேருந்து சேவைகளையும் மீண்டும் முழுமையாக இயக்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவாடானை தாலுகா காரங்காடு ஊராட்சி பகுதியிலிருந்து திருச்சி வரை இரு மார்க்கமும் மற்றும் மாலை நேரம் காரங்காடு முதல் தேவகோட்டை வரை இரு மார்க்கமும் இயங்கி வந்த பேருந்தினை மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இராமநாதபுரத்திலிருந்து பாம்பனுக்கு வேதாளை வழியாக இயக்கப்பட்டு வந்த பேருந்து கொரோனா காலகட்டத்திற்கு பிறகு நிறுத்தப்பட்டிருக்கிறது. அந்த வழித்தடத்தில் மீண்டும் பேருந்து இயக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலே குறிப்பிட்டுள்ள பேருந்துகள் உட்பட கொரோனா காலகட்டத்திற்கு முன்பு இயக்கப்பட்ட அனைத்து பேருந்துகளையும் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கீழக்கரை வட்டம், திருப்புல்லாணி ஒன்றியம், குதக்கோட்டை ஊராட்சி, கொட்டியக்காரன் வலசை சுற்றுவட்டார கிராம மக்கள் கீழ்க்கண்ட வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
எனவே கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இராமநாதபுரம் - பெரியபட்டினம்
வழி: மாவட்ட சட்டக் கல்லூரி, வள்ளி மாடன் வலசை, ஆண்டித்தேவன் வலசை, கொட்டியக்காரன் வலசை.
இராமநாதபுரம் - பெரியபட்டினம்
வழி: மாவட்ட சட்டக் கல்லூரி, வள்ளி மாடன் வலசை, வீரன் வலசை, கொட்டியக்காரன் வலசை, குதக்கோட்டை, உத்தரவை, நம்பியான் வலசை, திணை குளம், களிமண் குண்டு.
இராமநாதபுரம் - ரெகுநாதபுரம்
வழி: திருப்புல்லாணி உத்தரவை கொட்டியக்காரன் வலசை வைரவன் கோவில் சங்கத்தியான் வலசை.
குறிப்பிடப்பட்டுள்ள பேருந்து வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆர் எஸ் மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடியில் இருந்து மாணவ, மாணவிகள் கல்வி கற்கவும் பொதுமக்கள் அன்றாட தேவை மற்றும் மருத்துவ தேவைகளுக்காகவும் தினந்தோறும் ஏராளமானோர் இராமநாதபுரம் சென்று வருகின்றனர்.
கும்பகோணம் கோட்டம் பேருந்துகளில் இராமநாதபுரம் செல்ல ரூபாய் 20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் திருநெல்வேலி கோட்டம் பேருந்துகளில் ஸ்டேஜ் இல்லாத காரணத்தை கொண்டு கூடுதலாக பத்து ரூபாய் என ரூபாய் 30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்களின் நலனை கருதி திருப்பாலைக்குடியில் ஸ்டேஜ் ஏற்படுத்தி கும்பகோணம் கோட்டம் பேருந்து கட்டணம் போன்று திருநெல்வேலி கோட்ட பேருந்துகளிலும் ரூபாய் 20 பேருந்து கட்டணமாக வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அவர்களிடம் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி விடுத்துள்ள கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.