நரிக்குறவா்கள் மீதான அத்துமீறலை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!



அறந்தாங்கி அம்மா உணவகம் அருகே தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சலோமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தீபாவளி பண்டிகைையயொட்டி குலதெய்வத்தை கும்பிடுவதற்காக நன்கொடை வசூல் செய்ய சென்ற நரிக்குறவர்கள் அப்பாதுரை, ரஞ்சித், பாண்டி ஆகியோரை இழிவுப்படுத்தி 3 நாட்கள் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட கட்டாயப்படுத்தி போலீஸ் நிலையத்தை சுத்தம் செய்ய வைத்ததை கண்டித்தும், மேற்கண்ட செயல் நடக்க வாய்மொழி உத்தரவு பிறப்பித்த அதிகார மையத்தின் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும். 

பாரம்பரியமாக வழிபட்டு வரும் நரிக்குறவர்களின் வழிபாட்டு தலத்திற்கு பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும். நரிக்குறவர் காலனிக்கு கழிவறைகள் அமைத்து தர வேண்டும். கடந்த 1977- ம் ஆண்டு காலத்தில் கட்டப்பட்ட பழுதடைந்த காலனி வீடுகளை புதிதாக கட்டித்தர வேண்டும். நரிக்குறவர் காலனிக்கு குடிநீர் உள்ளிட்ட குறைபாடுகளை நரிக்குறவர்களுக்கு புறக்கணிக்காமல் செயல்படுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதில் மாநில தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் சாமுவேல்ராஜ், சின்னதுரை எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கவிவர்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments