மணமேல்குடி - பெருமருதூர் & ஆவுடையார்கோவில் - கோட்டைப்பட்டிணம் இரண்டு சாலைகளை மாவட்ட சாலையாக தரம் உயர்த்தி தர கோரி அமைச்சர் எ.வ .வேலு அவர்களிடம் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST ராமச்சந்திரன் MLA கோரிக்கை மனு



 


மணமேல்குடி - பெருமருதூர் சாலை & ஆவுடையார்கோவில் - கோட்டைபட்டிணம் ஆகிய இரண்டு சாலைகளை மாவட்ட சாலையாக தரம் உயர்த்தி தர கோரி  அமைச்சர் எ.வ .வேலு அவர்களிடம் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்  ST ராமச்சந்திரன் MLA  கோரிக்கை மனு அளித்துள்ளார்

இது குறித்து அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST ராமச்சந்திரன் MLA வெளியிட்டுள்ள அறிக்கையில் 

பெறுநர்

மாண்புமிகு. எ.வ. வேலு அவர்கள். தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர். தலைமைச் செயலகம், சென்னை 

அன்புடையீர்.

வணக்கம். எனது அறந்தாங்கி தொகுதியில் மணமேல்குடி - பெருமருதூர் சாலை மற்றும் ஆவுடையார்கோவில் - கோட்டைப்பட்டினம் சாலை ஆகிய இரண்டு சாலைகளையும், மாவட்டச் சாலையாக மேம்பாடு செய்து தர தங்களைக் கோரியிருந்தேன்.எனது கோரிக்கையை ஏற்று இச்சாலைகளை மாவட்டச் சாலைகளாக அறிவித்துள்ளமைக்கு எனது சார்பாகவும். எனது தொகுதி மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments