கோட்டைப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மாடு பலி..




தயவுசெய்து சாலையில் கால்நடைகளை விடாதீர்கள் - ஊராட்சி நிர்வாகம், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம் கோட்டைப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மாடு ஒன்று இறந்தது.

கிழக்கு கடற்கரை சாலையில் பகல் இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் ஏராளமாக செல்கின்றன. மேலும் வாகன ஓட்டிகள் அதி வேகமாக செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று டிசம்பர் 04 மாலை கோட்டைப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளியில் அருகாமையில் சுற்றி திரிந்த மாடு ஒன்று, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தது.





அப்பகுதி மக்கள் மாட்டின் உரிமையாளர் யாரும் தேடி வருகிறார்களா என்று சிலமணி நேரம் காத்திருந்தனர். ஆனால் யாரும் வராத காரணத்தினால் சமூக ஆர்வலர்கள் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி  அடக்கம் செய்தனர்.

மற்றோரு விபத்து




 
மாட்டை ஜேசிபி இயந்திரம் மூலம் அடக்கம் செய்யும் போது கோட்டைப்பட்டிணத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் லாபிர் அவர்கள் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து இருக்கும் போது.  கட்டுப்பாட்டை இழந்து வேறு ஒரு இரு சக்கர வாகனம் மோதியதில் மேலும் ஒரு விபத்து ஏற்பட்டது..

ஏற்கெனவே பலமுறை ஊராட்சி நிர்வாகம் எச்சரித்து சாலையில் கால்நடைகளை சுற்றித்திரிகிறுது எனவே தயவு செய்து கால்நடைகள் வளர்ப்பவர்கள் ஊராட்சி நிர்வாகிகத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு சமூக ஆர்வலர்கள்‌, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments