கடற்கரைகள் முழுக்க பனை மரங்கள்.! கடல் அரிப்பை தடுக்க கலக்கல் திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு




சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், பருவநிலை மாற்றம் தொடர்பாகத் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுப் பேசினார்.

சென்னையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்திற்கான ஆவணத்தை வெளியிட்டார்


இந்தக் கூட்டத்தில் பருவநிலை மாற்றம் தொடர்பாகத் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுப் பேசினார். பசுமை நிதியம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறிய அவர், பசுமை திட்டங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்படும் என்றார்.


உலகளாவிய பிரச்சினை
மேலும், காலநிலை மாற்றம் என்பது இந்தியாவுக்கான பிரச்சினை மட்டுமில்லை; உலகளாவிய பிரச்சினை என்ற முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் கடல் அரிப்பைத் தடுக்க கடற்கரை ஓரம் பனை மரங்களை நடும் பணி தொடங்கப்படும் என்றும் பேசினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "பருவநிலை மாற்றம் என்பது தமிழ்நாடு மற்றும் இந்தியாவுக்கான பிரச்சினை மட்டுமில்லை. அது ஒட்டுமொத்த உலகத்திற்குமான பிரச்சினை. நமது வளிமண்டலத்தில் உள்ள கார்பன் அளவு அதிகரித்ததால், புவியின் வெப்பநிலை அதிகரித்து காலநிலை மாற்றங்கள் நிகழத் தொடங்கியுள்ளன. இதனால் மனிதர்கள் மட்டுமின்றி, பல்வேறு உயிர்களும் பாதிக்கப்பட்டன. இந்த விளைவுகளை இப்போது நாம் நேரடியாகவே கண்டு வருகிறோம்.


கார்பன் சமநிலை
காலநிலை மாற்றத்தை உலகம் எதிர்கொள்ளவும் அதன் தாக்கத்தை மட்டுப்படுத்தவும் வரும் 2050ஆம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலையை அனைத்து நாடுகளும் எட்ட வேண்டும் எனப் பன்னாட்டு ஆய்வுகளும் உச்சி மாநாடுகளும் அறிவுறுத்துகின்றன. க்ளாஸ்கோவில் கடந்த ஆண்டு நடந்த பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர், வரும் 2070ஆம் ஆண்டிற்குள் இந்தியா கார்பன் சமநிலையை எட்டும் என்று அறிவித்திருந்தார். பிரதமரின் உரையும் கூட இது எவ்வளவு தீவிரமான பிரச்சினை என்பதை உணர்த்துவதாகவே உள்ளது. திமுக அரசு பொறுப்பேற்றதும் பல முன்னெடுப்புகளைச் செய்யப்பட்டுள்ளது. துறையின் பெயரே கூட சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை என்று மாற்றப்பட்டது.

விழிப்புணர்வு
கடல் அரிப்பைத் தடுக்கவும், கடற்கரையின் பல்லுயிரியத்தை பேணவும் பனை மரங்களை நடும் திட்டம் மிக விரைவில் செயல்படுத்தப்படும். இனிமேல் பசுமைத் திட்டங்களுக்கான அனுமதியை ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கத் திட்டங்கள் வகுக்கப்படும். வரும் 2030க்குள் தமிழ்நாடு பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்தும் முயற்சியில் இந்தத் திட்டம் நிச்சயம் முக்கிய பங்கு வகிக்கும். புதுப்பிக்கக்கூடிய ஆற்றலைப் பயன்படுத்தி உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிகரிக்கவும் அவற்றை எடுத்துச்செல்லவும் தனியான பசுமை வழித்தடம் உருவாக்கப்படும்.

பனை மரங்கள்
கடல் அரிப்பைத் தடுக்கவும், கடற்கரையின் பல்லுயிரியத்தை பேணவும் பனை மரங்களை நடும் திட்டம் மிக விரைவில் செயல்படுத்தப்படும். இனிமேல் பசுமைத் திட்டங்களுக்கான அனுமதியை ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கத் திட்டங்கள் வகுக்கப்படும். வரும் 2030க்குள் தமிழ்நாடு பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்தும் முயற்சியில் இந்தத் திட்டம் நிச்சயம் முக்கிய பங்கு வகிக்கும். புதுப்பிக்கக்கூடிய ஆற்றலைப் பயன்படுத்தி உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிகரிக்கவும் அவற்றை எடுத்துச்செல்லவும் தனியான பசுமை வழித்தடம் உருவாக்கப்படும்.

தமிழ்நாடு கார்பன் சமநிலை
காற்றாலைகளைப் புதுப்பிக்க புதிய கொள்கை எரிசக்தித் துறையால் வெளியிடப்படும். தமிழக அரசு 1,000 கோடி ரூபாயில் பசுமை நிதியம் ஒன்றை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக, நூறு கோடி ரூபாய் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா வரும் 2070ஆம் ஆண்டில் கார்பன் சமநிலையை அடையும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே தமிழகம் நிச்சயம் கார்பன் சமநிலையை அடையும்" என்றார்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments