தேனி முதல் போடிநாயக்கனூர் வரை ரயில் பெட்டியுடன் கூடிய சோதனை ஓட்டம்.. ஆர்வத்துடன் பார்த்த பொதுமக்கள்
தேனி முதல் போடிநாயக்கனூர் வரை ரயில் பெட்டியுடன் கூடிய சோதனை ஓட்டம்.. ஆர்வத்துடன் பார்த்த பொதுமக்கள்..

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து தேனி வரையில் ரயில் சேவைக்காக இருப்பு பாதை அமைக்கப்பட்ட நிலையில், இருப்புப் பாதை சோதனைக்காக பயணிகள் பெட்டிகளுடன் 125 கிலோ மீட்டர் வேகத்தில் இரண்டாவது கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது.

சோதனை ஓட்டம் :

தேனி மாவட்ட மக்களின் நீண்ட கால கனவு திட்டமான போடிநாயக்கனூர் முதல் மதுரை வரையிலான ரயில் சேவை திட்ட பணிகள் நடைபெற்று அதில் முதல் கட்டமாக தேனி முதல் மதுரை வரை ரயில் சேவை தொடங்கப்பட்டது. எஞ்சிய பணிகளான போடிநாயக்கனூர் முதல் தேனி வரை ரயில்வே திட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது.

போடியில் தற்போது விரைவு ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று இருப்புப் பாதை அமைப்பது, சிக்னல் பொருத்தும் பணி, ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று 90% பணியில் முடிவு பெற்றது.

இந்நிலையில் இருப்புப் பாதைசோதனைக்காக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் தேனியில் இருந்து போடி வரை இயக்கி சோதனை செய்யப்பட்டது. 120 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இன்ஜின் மட்டும் இயக்கி சோதனை செய்யப்பட்ட நிலையில் ரயில் பெட்டிகளுடன் கூடிய சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.

கடந்த 02.12.2022 அன்று 120 கிலோமீட்டர் வேகத்தில் எஞ்சின் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் நேற்று பயணியர்கள் மற்றும் சரக்கு பெட்டிகளுடன் இரண்டாவது கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டத்தில் போடியில் இருந்து தேனிக்கு 3 பயணிகள் பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டிகள் என மொத்தம் 5 பெட்டிகளுடன் 125 கிலோமீட்டர் வேகத்தில் விரைவு ரயிலின் இரண்டாவது கட்ட சோதனை நடைபெற்றது.

ரயில் பெட்டியுடன் சோதனை ஓட்டம் நடைபெற்றதை பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்து ரயிலை வரவேற்றனர்எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments