செந்தலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு - மற்றொருவர் படுகாயம்செந்தலை பேருந்து நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.மற்றொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள செந்தலையில் பேருந்து நிறுத்தம் அருகே இன்று 11.12.2022 மதியம் கோட்டைப்பட்டிணம் நோக்கி சென்ற சிமெண்ட் லாரி அதே வழியாக முன்புறம் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிவகங்கையை சேர்ந்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொருவர் செந்தலைபட்டினம் பொதுநல சங்கம் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

இதுபற்றி தகவல் அறிந்துவந்த போலீசார், பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சேதுபாவாசத்திரம் போலீஸார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments