அறந்தாங்கி வழியாக திருவாரூர் - காரைக்குடி மார்க்கத்தில் கேட் கீப்பர்கள் நியமிக்கவும் தினசரி ரயில் சேவைகளை நடவடிக்கை எடுக்க திரு. S. திருநாவுக்கரசர் M.P வலியுறுத்தில்



        அறந்தாங்கி  வழியாக திருவாரூர் -   காரைக்குடி மார்க்கத்தில் கேட் கீப்பர்கள் நியமிக்கவும் தினசரி ரயில் சேவைகளை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி (13-12-2022) அன்று பாராளுமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான திரு. S. திருநாவுக்கரசர் உரையாற்றினார்.

இதுகுறித்து திருநாவுக்கரசர் MP அவர்கள் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்

நேற்று  (13.12.22) மாலை 7.00 மணியளவில் பாராளுமன்றத்தில் திரு. சு. திருநாவுக்கரசர் எம்.பி. அவர்கள்; ஜீரோ ஹவரில் (நேரமில்லா நேரம்) அவசர பொது முக்கியமான வேண்டுகோள் குறித்து எழுப்பி பேசினார். அதன் தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
       
அறந்தாங்கி 

காரைக்குடி – திருவாரூர் ரயில்வே லைன் மீட்டர் கேஜாக இருந்து சுமார் 1000 கோடி செலவில் 150 கி.மீ. அகல பாதையாக மாற்றம் செய்யப்பட்டது.  இப் பணி நிறைவு பெற்று சுமார் 2 ஆண்டுகள் ஆகிறது.  தினசரி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இவ்வழியாக இயக்கப்படவில்லை. காரணம் இந்த இருப்பு பாதையில் 100 கேட்டுகள் உள்ளன.  இக் கேட்டுகளில் கேட் கீப்பர்கள் பணியமர்த்தப்பட வேண்டும்.  இப் பணி நிறைவேறாததால் தினசரி ரெயில்கள் இயக்கப்படவில்லை.  மாண்புமிகு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அவர்கள் கேட் கீப்பர்களை நியமிக்கவும், தினசரி ரயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
       
கீரனூர் 

அடுத்து திருச்சி – புதுக்கோட்டைக்கு இடையில் கீரனூர் உள்ளது.  கீரனூர் நகர பஞ்சாயத்து மற்றும் தாலுகா தலைநகராகும்.  இதைச் சுற்றி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.  50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளார்கள்.  திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் ரயில்கள் கீரனூரில் நிறுத்தப்பட்டு செல்ல வேண்டும்.  இதுகுறித்து ரயில்வே தலைவர், பொது மேலாளர், மாண்புமிகு ரெயில்வே துறை அமைச்சர் உள்ளிட்டோரை பலமுறை வற்புறுத்தியுள்ளேன்.  கோரிக்கை இதுவரை  நிறைவேற்றப்படவில்லை.  மாண்புமிகு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அவர்கள் கீரனூரில் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த பக்கத்தில் கூறப்பட்டுள்ளது..

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments