எஸ்.பி.பட்டினம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பஸ்சில், மாட்டு வண்டி மோதி 2 மாடுகள் பலி

        ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காந்தி நகரைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் கார்த்தி (வயது 27). திருவாடானை தாலுகா ஓரியூரைச் சேர்ந்த இளங்கோ என்பவர் மகன் செல்வம் (30). இவர்கள் இருவரும் 2 மாடுகளை பூட்டி மாட்டு வண்டி பந்தயத்திற்கு பழக்குவதற்கு கிழக்கு கடற்கரை சாலையில் ஓட்டிச் சென்று பயிற்சி எடுத்தனர்.
எஸ்.பி. பட்டினத்தை அடுத்த தீர்த்தாண்டதானம் அருகே மாட்டு வண்டி பாய்ந்து சென்ற போது, எதிரே வந்த அரசு பஸ் வந்தது. வண்டியை பார்த்ததும், பஸ்சை டிரைவர் ஓரமாக நிறுத்தி உள்ளார். ஆனால் மாட்டு வண்டி, நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியதாக தெரிகிறது. இதில் 2 மாடுகளும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தன. மாட்டு வண்டியும் நொறுங்கியது. இதுகுறித்து அரசு பஸ் டிரைவரான உத்திரகோசமங்கையைச் சேர்ந்த ராஜசவுந்தர நாயகன் (50)எஸ்.பி.பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகானந்தம் விசாரணை நடத்தி, மாட்டு வண்டியை ஓட்டிச் சென்ற கார்த்தி, செல்வம் ஆகிய இருவரையும் கைது செய்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments