தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம்.! மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தகவல்!!



புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்ச்செம்மல் விருது பெற தகுதியானவர்கள் எதிர்வரும் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.

தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்தம் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்து முகமாக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு தமிழ் ஆர்வலரைத் தெரிவு செய்து அவர்களுக்கு "தமிழ்ச்செம்மல்" விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. "தமிழ்ச்செம்மல்" விருதாளர்களுக்கு ரூ.25000 ரொக்கப் பரிசுத்தொகையும் தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வகையில் 2022ஆம் ஆண்டிற்கான "தமிழ்ச்செம்மல்" விருதுக்கான விண்ணப்பங்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

விருதுக்குரிய விண்ணப்பப்படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கும் தமிழ் ஆர்வலர்கள், விருதுக்கான விண்ணப்பத்தினை இருபடிகளில் உரியவாறு பூர்த்தி செய்து. தன்விவரக்குறிப்பு, நூல்கள் / கட்டுரைகள் ஏதேனும் வெளியிடப்பட்டிருப்பின் அவை பற்றிய விவரங்கள் பட்டியலோடு ஒவ்வொன்றிலும் ஒரு படி இணைக்கப்பட வேண்டும். தமிழ்ச் சங்கங்கள் அல்லது தமிழ் அமைப்புகளில் ஏதேனும் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருப்பின் அதுபற்றிய விவரம். விருதுக்குத் தகுதியாகக் குறிப்பிடத்தக்குப் பணிகள் தமிழறிஞர்கள் இருவரின் பரிந்துரைக்கடிதம் அல்லது மாவட்டத்தில் செயற்படும் தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம் மற்றும் இரண்டு கடவுச்சீட்டு அளவிலான நிழற்படங்களுடன், ஆற்றிய தமிழ்ப்பணிகளுக்கானச் சான்றுகளையும் இணைத்து புதுக்கோட்டை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 21ம் தேதிக்குள் கிடைக்கப்பெறும் வகையில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைத்தல் வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 04322-228840, 9952280798 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரையோ நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments