அறந்தாங்கி ஆர்டிஓ தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்!அறந்தாங்கி வட்டாச்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ சொர்ணராஜ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

அதில் பருவமழையை நம்பி விவசாயம் செய்த விவசாயிகள் சரியான மழை இல்லாமல் பயிர்கள் வறட்சி அடைந்துள்ளது. ஆகவே மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

விவசாயிகள் கோரிக்கை அனைத்தும் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு எடுக்கப்படும் என அறந்தாங்கி கோட்டாட்சியர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், ஆவுடையார்கோவில், மணமேல்குடி வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments