நவாஸ்கனி எம்.பி. சார்பில் 720 மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி உதவித்தொகைகளை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாெமாழி வழங்கினார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி சார்பில் உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக 2022-ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று கேணிக்கரையில் உள்ள தனியார் திருமண மகாலில் நடைபெற்றன.

இதில் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் துறைகளில் படித்து வந்த 720 மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மைதீன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் வழங்கினார்கள்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம்.தி.மு.க. மாநில மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர், மாநில இளைஞரணி துணை செயலாளர் இன்பா ரகு, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், உள்ளிட்ட பிரமுகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வர்த்தக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசும்பொழுது, ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி கடந்த 3 ஆண்டு காலமாக 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உயர்கல்வி தொகை வழங்கி உள்ளார். அவரது பணி பாராட்டதக்கது என்று கூறினார்கள்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments