டெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் மட்டும் முதல் கட்டமாகசாத்வீக உணவு சேவை தொடக்கம் விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்- IRCTC அறிவிப்பு
நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். அதனால் பலரும் வயிறு பயணத்தை தேர்வு செய்வதால் பயணிகளுக்காக ஐ ஆர் சி டி சி பல வசதிகளை செய்து வருகிறது. டிக்கெட் முன்பதிவு முதல் உணவு வரை அனைத்திற்கும் டிஜிட்டல் முறையில் தீர்வு கிடைக்கும் வகையில் உள்ளது.
ரயிலில் உணவு தொடர்பான பெரிய அப்டேட். ரயில்வே அமைச்சகம் புதிய உத்தரவு.
இந்திய ரயில்வேயின் சாத்வீக உணவு சேவை: ரயிலில் நீண்ட பயணத்தின் போது, பயணிகள் முன் அடிக்கடி உணவு, பானங்கள் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் பல நேரங்களில் மக்கள் தங்களின் வீட்டில் சமைத்த உணவை எடுத்துச் செல்வதை ஆம் காணலாம். ஆனால் அப்படி செய்ய முடியாதவர்களின் நிலை என்ன? எனவே, சுத்தமான சைவ உணவு (சாத்வீக உணவு) உண்பவர்களுக்காக ரயில்வேயில் புதிய ஏற்பாடு தொடங்கப்பட்டுள்ளது. உங்களுக்கும் இது போன்ற பிரச்சனைகள் இருந்தால், இந்த செய்தி நிச்சயம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். அதன்படி ரயில்வே அமைச்சகத்தின் புதிய உத்தரவுக்குப் பிறகு, இனி பயணிகள் பயணத்தின் போது முற்றிலும் சாத்வீக உணவைப் பெற முடியும்.
இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான IRCTC, பயணத்தின் போது பயணிகளுக்கு சாத்வீக உணவை வழங்க இஸ்கானுடன் கைகோர்த்துள்ளது. இதன் கீழ், சாத்வீக உணவு உண்ணும் பயணிகளுக்கு, இஸ்கான் கோவிலின் கோவிந்தா ரெஸ்டோரன்ட் என்ற உணவகத்தில் உணவு ஆர்டர் செய்த பின், அவர்களது இருக்கைகளுக்கு டெலிவரி செய்யப்படும். IRCTC மற்றும் ISKCON இடையேயான இந்த ஒப்பந்தத்தின் கீழ்,
இந்த சேவை முதல் கட்டமாக டெல்லியில் உள்ள ஹஜ்ரத் நிஜாமுதீன் நிலையத்தில் மட்டுமே இந்த சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீண்ட தூர பயணம் செல்லும் பயணிகள் (வெங்காயம், பூண்டு சாப்பிடாத பயணிகள்) பேண்ட்ரி காரில் இருந்து கிடைக்கும் உணவை தவிர்க்கின்றனர். ஆனால் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அத்தகைய பயணிகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
எனவே நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தினர் ரயில் பயணத்தின் போது சாத்வீக உணவை சாப்பிட விரும்பினால், ஐஆர்சிடிசி இ-கேட்டரிங் இணையதளம் அல்லது ஃபுட் ஆன் ட்ராக் செயலியில் உணவை முன்பதிவு செய்ய வேண்டும். இதற்கு, ரயில் புறப்படுவதற்கு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக PNR எண்ணுடன் ஆர்டர் செய்ய வேண்டும். ஆர்டர் செய்த பிறகு, உணவு உங்கள் இருக்கைக்கு வந்து சேரும்.
இதற்கிடையில் கோவிந்தா உணவகம் வழங்கும் உணவில், பயணிகளுக்கு ஓல்ட் டெல்லியின் வெஜ் பிரியாணி, டீலக்ஸ் தாலி, மகாராஜா தாலி, தால் மக்கானி, பனீர் உணவுகள், நூடுல்ஸ் மற்றும் பிற சாத்வீக உணவுகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.