புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறந்த அரசுப் பள்ளி என்ற விருது பெற்ற நடுநிலைப் பள்ளி- சாதித்தது எப்படி தெரியுமா?




புதுக்கோட்டை மாவட்டத்தில் ராஜகிரி ஊராட்சியை சேர்ந்த குளவாய்ப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாவட்டத்தின் சிறந்த பள்ளி என்று தேர்வு செய்யப்பட்டு விருதையும் பெற்றுள்ளது.

தமிழக அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் சிறந்த அரசுப் பள்ளிக்கான விருது தமிழக முதல்வர் சார்பில் கல்வித் துறை அமைச்சரால் வழங்கப்பட்டது. இதனை அடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறந்த அரசுப் பள்ளிக்கான விருதை பெற்றது குளவாய்ப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.

இது குறித்து பேசிய பள்ளியின் தலைமை ஆசிரியர், ‘எங்கள் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஒவ்வொரு மாணவர்களும் படிப்பிலும் கலைத் திறன்களிலும் , விளையாட்டிலும் மிகவும் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் செயல்பட்டு வருகின்றனர். மேலும் ஆசிரியர்கள் அனைவரும் சிறந்த முறையில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களின் திறன்களை ஊக்குவித்து வருகின்றனர். மேலும் தனியார் பள்ளிக்கு நிகராக பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

இதனால் வருடந்தோறும் மாணவ சேர்க்கையும் அதிகரித்து வருகிறது என்றும் மேலும் பள்ளியில் ஸ்மார்ட் ஃபோர்டு வகுப்புகள் மாணவர்களின் திறன்களையும் வளர்க்க உதவுகிறது.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு மூலம் தங்களுக்கு இந்த சிறந்த அரசுப் பள்ளிக்கான விருது கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும் தங்கள் பள்ளியில் சுற்றுச் சுவர் இல்லாத நிலையில் சாலையின் அருகே பள்ளி இருப்பதால் மாணவர்களின் நலன் கருதி இதனை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் குளவாய்ப்பட்டி ஊராட்சி மன்ற துணை தலைவர் செந்தமிழ் பேசிய போது இந்தப் பள்ளி சிறந்த அரசுப் பள்ளிக்கான விருதை பெற்று பெருமையை தேடித் தந்துள்ளதாகவும் , மேலும் பள்ளியின் தரத்தை உயர்த்த அரசிடம் கோரியுள்ளோம். அரசு விரைவில் செயல்படுத்தி தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments