சென்னை தாம்பரம் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே கிருஸ்துமஸ் சிறப்பு ரெயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு






சென்னை தாம்பரம் 
திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே கிருஸ்துமஸ் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 

06021 தாம்பரம் - திருநெல்வேலி 

தாம்பரம் - திருநெல்வேலி சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் (வ.எண்.06021) வருகிற 22-ந் தேதி வியாழக்கிழமை தாம்பரத்தில் இருந்து இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.00 மணிக்கு திருநெல்வேலி ரெயில் நிலையம் சென்றடைகிறது.

06022  திருநெல்வேலி - சென்னை எழும்பூர் 

மறுமார்க்கத்தில் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் (வ.எண்.06022) வருகிற 23-ந் தேதி வெள்ளிக்கிழமை திருநெல்வேலியில் இருந்து மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் சென்றடைகிறது. 




இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் போது செங்கல்பட்டு விழுப்புரம் விருத்தாசலம் திருச்சி புதுக்கோட்டை காரைக்குடி சிவகங்கை மானாமதுரை அருப்புக்கோட்டை விருதுநகர் சாத்தூர் கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி செல்லும் போது கூடுதலாக தாம்பரம் மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்..

இந்த சிறப்பு ரயிலுக்கு விரைவில் முன்பதிவு தொடங்குகிறது.

மேலும் தாம்பரம் நாகர்கோவில்  இடையே சிறப்பு ரயில் இயங்கிறது..   எர்ணாகுளம் சென்னை சென்ட்ரல் எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் இயங்கிறது.




1. தாம்பரம் - திருநெல்வேலி -சென்னை எழும்பூர் 

2. தாம்பரம் - நாகர்கோவில் 

3. எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் 








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments