`Delete for everyone’-க்கு பதிலா, `Delete for me’ கொடுத்துட்டீங்களா? இனி கவலப்படவேணாம்!






வாட்ஸ்அப்பில் 'Delete for Everyone' கொடுப்பதற்கு பதிலாக தவறுதலாக ‘delete for me’ கொடுத்துவிட்டு அவதிப்பட்டவரா நீங்கள்..? வந்துவிட்டது தீர்வு..

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில் பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது புதிய அம்சங்களும், அப்டேட்டும் வந்துகொண்டே இருக்கின்றன. அந்தவகையில் வாட்ஸ்அப் செயலியில் இன்று வெளியாகியிருக்கும் அப்டேட்டில் ஓர் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் குரூப்பிலோ அல்லது தனிப்பட்ட நபருக்கோ தவறுதலாக மெசேஜ் அனுப்பும் பட்சத்தில் அதனை 'Delete for Everyone' கொடுத்து யாரும் பார்க்காதவாறு செய்துவிட முடியும். ஆனால் சில சமயங்களில் 'Delete for Everyone' கொடுப்பதற்கு பதிலாக தவறுதலாக ‘delete for me’ கொடுத்துவிட்டு அவதிப்பட்ட அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். காரணம், ‘delete for me’ கொடுத்து அழிக்கப்பட்ட மெசேஜ் அனுப்பி நபருக்கு மட்டும் தெரியாமல் இருக்கும். ஆனால் குரூப்பில் உள்ள மற்றவர்கள் வழக்கம்போல் அந்த மெசேஜை பார்க்க முடியும். அந்த மெசேஜை எதுவும் செய்ய முடியாத கையறுநிலையில் அனுப்பிய நபர் இருப்பார். இதனைக் கருத்தில்கொண்டு வாட்ஸ்அப் ஒரு புதிய தீர்வு கொண்டு வந்துள்ளது.

அதன்படி ‘delete for me’ கொடுத்து அழிக்கப்பட்ட மெசேஜை Undo கொடுத்து திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். அதனை ரெக்கவர் செய்தபின் 'Delete for Everyone' கொடுக்க விரும்பினால் கொடுத்துக் கொள்ளலாம். ‘delete for me’ கொடுத்து அழிக்கப்பட்ட மெசேஜ் மீது Undo ஆப்ஷன் 5 நொடிகள் திரையில் தோன்றும். 5 நொடிகளுக்குள் Undo கொடுத்து விடுமேயானால் ‘delete for me’ கொடுத்து அழிக்கப்பட்ட மெசேஜ் திரும்ப தோன்றிவிடும். ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் அனைவருக்கு இந்த புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments