மல்லிப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் பேரிகாட் வைக்கும் & சாலை பாதுகாப்பு வாசகங்கள் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு 


தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் பேரிகாட் வைக்கும் நிகழ்வு சாலை பாதுகாப்பு வாசகங்கள்  துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது

சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர்கள் தலைமையில் பேரிகாட் வைக்கும்  நிகழ்வு டிசம்பர் 25 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது....

இவ்விழாவில் மல்லிப்பட்டிணம் சமுதாய நல மன்றம் நிர்வாகிகள் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் ‌‌‌‌.

விழிப்புணர்வு வாசகங்கள்
சாலை பாதுகாப்பு வாசகங்கள்

நடைபாதையில் நடப்போம்! நலமுடனே பயணிப்போம்!!

பொறுமையாக ஓட்டுவோம்! பிறரை பொருட்படுத்தி ஓட்டுவோம்!!

விதிகளை மதிப்போம்! வேதனைகளை தவிர்ப்போம்!!

சிக்னலை மதிப்போம்! சிக்கலை தவிர்ப்போம்!!

கவனமாக ஓட்டுவோம்! காலமெல்லாம் வாழ்வோம்!!

வாகனத்தை நிறுத்தி செல்போன் பேசுவோம்!

தலைக்கவசம் அணிவோம்! சீட் பெல்ட் அணிவோம்!!

படியில் பயணம்! நொடியில் மரணம்!!

இடைவெளி காப்போம்! இன்னலை தவிர்ப்போம்!!

போதையில் பயணம்! பாதையில் மரணம்!!

வேகம் சோகத்தை தரும்! நிதானம் நிம்மதியை தரும்!!

வளைவில் முந்தினால் மரணம் வருவது உறுதி!!

தூக்கத்தில் ஓட்டினால்! துக்கமே வரும்!!

சாலையில் அலட்சியம்! சாவது நிச்சயம்!!

முறையான இயக்கம்! முத்தான பயணம்!!

பொறுப்புடன் ஓட்டுவோம்! சிறப்புடன் வாழ்வோம்!!

விதி மீறாமல் ஓட்டுவோம்!

விதி மீறுபவர்களையும் வீழ்த்தாமல் ஓட்டுவோம்!!

பாதுகாப்பாக ஓட்டுவோம்! பிறரையும் பாதுகாத்து ஓட்டுவோம்!!

சாலையில் கவனமாக ஓட்டுவோம்! சந்திப்புகளிலும் கவனமாக ஓட்டுவோம்!!

பொறுமையுடன் ஓட்டுவோம்! பொறுமை இல்லாதவர்களையும் காப்போம்!!

அனுசரித்து ஓட்டுவோம்! அனைவரையும் காப்போம்!!

சகிப்புத்தன்மை கடைப்பிடிப்போம்! சண்டைக்காரர்களையும் திருத்துவோம்!!

எதிர்பார்த்து ஓட்டுவோம்! எந்த சூழலிலும் காப்போம்!!

மனமே கவனம்! மனது அறியாததை கண்களும் பார்ப்பதில்லை! காதுகளும் கேட்பதில்லை!! மூளையும் உணருவதில்லை!!!

மன நலமும், உடல் நலமும் உயிருள்ளவரை அழியாத சொத்து!

மது, போதை, புகைப் பழக்கத்தை விட்டொழிப்போம்! மனதையும் உடலையும் காப்போம்!!

சாலைவிதிகளை மதித்தால், விபத்தில்லா பயணம் சாத்தியமே!!

சாலை பாதுகாப்பு! சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு!!

சாலை பாதுகாப்பு! நமது உயிர் பாதுகாப்பு!!

வாகன அறிவும், சாலை அறிவும்! வாழ்நாள் பாதுகாப்பு!!

புத்தாக்கப்பயிற்சி பெறுவோம்! புதுப்பித்தல் கல்வி பெறுவோம்!!

பொது வாகனத்தை பயன்படுத்துவோம்! தனி வாகனத்தை தவிர்ப்போம்!!

காவலர்கள் நமக்கு தோழர்கள்! மதிப்போம் மனித நேயம் காப்போம்!!

முதலுதவியை முக்கியமாக கற்போம்!!

ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, வாகன காப்பீடு, விபத்து காப்பீடு அனைவருக்கும் அவசியம்!!

ஓய்வின்றி ஓட்டாதீர்! உயிருடன் வாழ்வீர்!!

ஒற்றை விளக்குடன் ஓட்டாதீர்! ஒழுக்கத்தை கடைப்பிடிப்பீர்!!

இரவில் வெளிச்சத்தை தாழ்த்துவீர்! வாழ்நாளை நீட்டிப்பீர்!!

தலைக்கவசம் தன்னுயிர் காக்கும்! தன்னுயிர் தன்னுறவு காக்கும்!!

போதையில் வாகனம் ஓட்டுவது! பயணிகளுக்குத் தகனம் காட்டுவது!!

போதையில்லா வாகன ஓட்டுதல்! விபத்தில்லாப் பாதையைக் காட்டுதல்!!

சாலை விதிகளை மதிப்போம்! சந்தோசமான பயணத்தைக் கொடுப்போம்!!

சாலை விதிகளை மதிப்போம்! வரும் சங்கடங்களைத் தடுப்போம்!!

சாலை விதிகள் சாவைக் குறைக்கும் சக்திகள்!!

விபத்தைத் தடுக்கலாம் விதிகளை மதித்தால்!!

சமுதாய நலமன்றம்
மல்லிப்பட்டினம்..

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments