ஆவுடையார் கோவில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் அறந்தாங்கி சாலை, மீமிசல் சாலை, பெருமருதூர் சாலை, ஏம்பல் சாலை ஆகிய பிரதான சாலைகளில் பகலிலும், இரவிலும் மாடுகள் படுத்து உறங்குகிறது.

இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. தெற்கு ரதவீதி மற்றும் கீழரத வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் வாங்கி வைத்த பொருள்களை வாயால் கடித்து சேதம் செய்தும் தின்றுவிட்டும் செல்லும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது. மேலும் ஆவுடையார்கோவில் சாலைகளில் சுற்றுத்திரியும் மாடுகளால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆவுடையார்கோவில்  தெற்கு வீதியில் நடுரோட்டில் படுத்திருந்த மாடு பேருந்து உள்ளே மாட்டிக் கொண்டது அரசு பேருந்து நடத்துனரின் பெருமுயற்சிக்குப் பிறகு மாடு வெளியே மீட்கப்பட்டது.

இதனால் அப்பகுதியில் பெரும் வாகனநெரிசல் ஏற்பட்டது. சாலைகளில் திரியும் மாடு, நாய் மற்றும் பன்றிகளால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. 

இதனால் பெரும் அசம் பாவிதம் ஏதும் நடக்கும் முன் ஆவுடையார்கோவிலில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி : ஆவுடையார் கோவில் சுற்றுலா தலம்..













எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments