கட்டுமாவடியில் மீனவர் வலையில் சிக்கிய புள்ளி களவா மீன்






கட்டுமாவடியில் மீனவர் வலையில் புள்ளி களவா மீன் சிக்கியது.

புதுக்கோட்டை மாவட்டம் 
கட்டுமாவடியை சேர்ந்த மீனவர் விஜய், செம்பியன்மகாதேவிப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் ரகு ஆகியோர் நாட்டுப்படகு மூலம் கடலில் மீன் பிடித்த போது அரியவகை புள்ளி களவா மீன் அவர்களது வலையில் சிக்கியது.

 இவ்வகை மீன்கள் ஆழமான பகுதிகளில் இருப்பதால் விசைப்படகு மீனவர்களின் வலையில் மட்டுமே சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, இந்த மீன் விற்பனைக்காக கட்டுமாவடி மீன் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இது சாதாரணமாக ஒரு கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனையாகும். 4 கிலோ எடை கொண்ட இந்த மீன் ரூ.1,200-க்கு ஏலம் போனது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments