திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம், ஓம்கார் பவுண்டேசன், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மனோரா,மனோரா ரோட்டரி கிளப், பட்டுக்கோட்டை விதை அறக்கட்டளை, கைஃபா கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு இணைந்து முன்னெடுக்கும் டெல்டா மாவட்ட கடற்கரை பகுதிகளில் 5 இலட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி தொடக்கவிழா பட்டுக்கோட்டை அடுத்த மனோரா கோட்டை கடற்கரையில் டிசம்பர் 24 ம் தேதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு தொடங்குகிறது.
இப்பணியில் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 6 கல்லூரிகளிலிருந்து 500 நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று பனை விதைகளை விதைப்பு செய்கின்றனர். பின்பு கடற்கரை பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவு பொருட்களை சேகரித்து சேதுபவாசத்திரம் ஒன்றிய சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர்.
பனை விதைகள் விதைக்கும் பணியை மாவட்ட வனத்துறை அலுவலர்கள் திருவாரூர் முனைவர் க.அறிவொளி, தஞ்சாவூர் அகில்தம்பி, நாட்டு நலப்பணித்திட்ட மாநில அலுவலர் முனைவர் ம.செந்தில்குமார், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ.இலக்குமி பிரபா உள்ளிட்டோர் தொடங்கி வைக்கிறார்கள்.
இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மனோரா கிளை பொருளாளர் எஸ்.பழனியப்பன் ,
பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி கிளப் தலைவர் பி.சிவச்சந்திரன் , பட்டுக்கோட்டை விதை அறக்கட்டளை தலைவர் சக்திகாந்த், கைஃபா கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க தலைவர் கார்த்திகேயன் வேலுச்சாமி, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு, சொக்கநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராம் பிரசாத் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மன்னார்குடி இராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ப.பிரபாகரன், கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர் முனைவர் ஏ.முருகானந்தம், ஓம்கார் பவுண்டேசன் இயக்குனர் முனைவர் பாலாஜி, கே.நீலகண்டன், முகமது அலி ஜின்னா ஆகியோர் செய்து வருகின்றனர்.
இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மனோரா கிளை தலைவர் டாக்டர் ஏ.பன்னீர்செல்வம் வரவேற்கிறார். மல்லிப்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலாபேகம் முகமது அலி ஜின்னா நன்றி கூறுகிறார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.