மல்லிப்பட்டினம் மனோரா அருகே நடந்து சென்றவர் மீது வாகனம் மோதி உயிரிழப்பு.!தஞ்சை மாவட்டம் சேதுவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினம் மனோராவில்  வாகனம் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம்,நாகூரை சேர்ந்த மூர்த்தி (வயது 35) என்பவர் சேதுபாவசத்திரத்தில் தங்கி மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று(டிச.22) மாலை 7 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலை ஓரமாக நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவலறிந்து விரைந்து வந்த சேதுபாவாசத்திரம் காவல்துறையினர்  எஸ்டிபிஐ கட்சி ஆம்புலன்ஸ் மூலம் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் பிரேதத்தை கைப்பற்றி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Source : மல்லி நீயூஸ்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments