வெள்ளையபுரத்தில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் தள்ளுமுள்ளு 

   
    திருவாடானை தாலுகா வெள்ளையபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஓரியூர் பாம்பாற்றில் செயல்பட்டு வரும் மணல் குவாரியில் அரசு விதிகளுக்கு புறம்பாக மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் உடனே மணல் குவாரியை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப் பாளரான வெண்குளம் ராஜூ பேசிக் கொண்டிருந்தபோது அரசு விதிகளுக்கு புறம்பாக மணல் அள்ளப்படும் பட்சத்தில் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் மணல் குவாரி முறைகேடுகளை இப்பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் யாரும் கண்டுகொள்வதில்லை என்று பேசினார். அப்போது வெள்ளையபுரம் தி.மு.க. கவுன்சிலரான முகமது ரில்வான் மேடையை நோக்கிச் சென்று பேச்சை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

 அதற்கு நாம் தமிழர் கட்சியினர் நாங்கள் முறைப்படி போலீஸ் அனுமதி பெற்று கூட்டம் நடத்துகிறோம் என்றும் பேச்சை நிறுத்த முடியாது என்றும் கூறியதால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே போலீசார் சமரசம் செய்தனர். ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸ் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments