தமிழகத்தில் அதிகரிக்கும் கடல் அரிப்பு - மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி தகவல்!






இந்திய கடற்கரை பகுதிகளில் 33% கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் தமிழகத்தில் மட்டும் 43% கடற்கரை பகுதிகள் அரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

கடல்நீர் மட்டம் உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அதற்கு மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் விரிவான விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், 1901ஆம் ஆண்டு முதல் 1971ஆம் ஆண்டு வரை கடல்நீர் மட்டம் உயர்வு ஆண்டிற்கு சராசரியாக 1.3 மில்லி மீட்டராக இருந்ததாகவும் இது 2006 முதல் 2018 வரை 3.7 மில்லி மீட்டராக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கடல்நீர் மட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 6 ஆயிரத்து 632 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடலோர பகுதிகள் உள்ள நிலையில் இதில் மூன்றில் ஒரு பகுதி அரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில் 991 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடற்கரை உள்ள நிலையில் இதில் 423 கிலோ மீட்டர் அதாவது 42.7% அரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments