ஆவுடையார் கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய கணித தின கொண்டாட்டம்






ஆவுடையார் கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய கணித தினம் கொண்டாடப்பட்டது.

கணிதமேதை இராமானுஜன் பிறந்தநாளான டிசம்பர் 22 தேசிய கணித நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று (22-12-2022) கணித மன்றம் மற்றும் வானவில் மன்றத்தின் சார்பில் தேசிய கணித தினம் கொண்டாடப்பட்டது.






இந்நிழ்வில் கணித மேதை ராமானுஜன் அவர்களின் திருஉருவப் படத்திற்கு பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் மலர்கள் தூவி மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினார். மாணவர்களுக்கு கணித மேதையின் வாழ்க்கை வரலாற்றை கணித மன்ற செயலாளர் கந்தவேள் எடுத்துரைத்தார். ஆறு முதல் எட்டு வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கணித வாய்பாடு போட்டி நடத்தப்பட்டது. இதில் 16 வாய்பாடு வரை தெளிவுடன் ஒப்புவித்த மாணவர்களுக்கு அழகிய எழுது பொருள் பெட்டி (Pencil box) பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளி உதவித் தலைமையாசிரியர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இறுதியில் வானவில் மன்ற செயலாளர் குருப்ஸ்கயா நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments