ரயில்வே வாரியத்தின் தலைவராக அனில் குமார் லஹோடி பொறுப்பேற்பு!




ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக அனில் குமார் லஹோட்டி பொறுப்பேற்றுக் கொண்டார்.

அனில் குமார் லஹோடியின் நியமனத்துக்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில்,  மத்திய ரயில்வே அமைச்சகத்தின் ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக அனில் குமார் லஹோடி ஞாயிற்றுக்கிழமை (ஜன.1) பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 

இதற்கு முன், லஹோடி ரயில்வே வாரியத்தின் உறுப்பினராக (உள்கட்டமைப்பு) பணியாற்றியுள்ளார். 

1984-ஆம் வருட இந்திய ரயில்வே பொறியாளர்கள் பிரிவைச் சேர்ந்த லஹோடி, ரயில்வேயில் தனது 36 ஆண்டுகளுக்கும் மேலான பணி காலங்களில், மத்திய, வடக்கு, வட மத்திய, மேற்கு மற்றும் மேற்கு மத்திய ரயில்வே மற்றும் ரயில்வே வாரியத்தில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

மேற்கு ரயில்வேயின் பொதுமேளாளராகவும்  பல மாத காலம் அவர் பணியாற்றினார். பொது மேலாளராக அவர் பதவி வகித்த போது அதிக சரக்குகளை கையாண்டு ரயில்வே துறை சாதனைபடைத்ததோடு, அதிக எண்ணிக்கையிலான கிசான் ரயில்களும் இயங்கின. ரயில்வேயின் வருவாயை அதிகரிப்பதற்கான பல்வேறு முயற்சிகளையும் அப்போது அவர் மேற்கொண்டார்.

ஸ்கிராப் விற்பனை மற்றும் விரிவான டிக்கெட் பரிசோதனை டிரைவ்கள் மூலம் வருவாயில் சாதனை முன்னேற்றத்தையும் அவர் கொண்டு வந்தார். மும்பையில் குளிரூட்டப்பட்ட துணை நகர்ப்புற சேவைகளை விரிவுபடுத்துவதில் உள்ள பிரச்னையை வெற்றிகரமாக வழிநடத்தி தீர்வு காண்டார். அவரது பதவிக் காலத்தில், மத்திய ரயில்வேயானது, உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்தியது மற்றும் மும்பையில் திவா மற்றும் தானே இடையே நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5 ஆவது மற்றும் 6 ஆவது பாதையை இயக்கியது.

அவர் லக்னோ, வடக்கு ரயில்வேயின் கோட்ட ரயில்வே மேலாளராகப் பணிபுரிந்த போது, அங்கு நெரிசலான காசியாபாத்-பிரயாக்ராஜ் வழித்தடத்திற்கு மாற்றாக லக்னோ-வாரணாசி பாதையில் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த பல முயற்சிகளை எடுத்தார். லக்னோ பிரிவில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிகள் மற்றும் தூய்மைத் தரங்களில் அவரது பணி கணிசமான முன்னேற்றத்தைக் கண்டது.

வடக்கு இரயில்வேயில் தலைமை நிர்வாக அதிகாரி (கட்டுமானம்) மற்றும் தலைமைப் பொறியாளராக (கட்டுமானம்) பணிபுரிந்த போது, அவர் புதிய பாதைகள், இரட்டிப்பு மற்றும் பல தடங்களின் உள்கட்டமைப்புத் திட்டங்கள், யார்டு மறுவடிவமைப்பு, முக்கியமான பாலங்கள், நிலையக் கட்டுமானம் போன்ற பலவற்றைச் செயல்படுத்தினார். 

தில்லியில் உள்ள விஹார் டெர்மினல் மற்றும் புது தில்லி நிலையத்தின் சின்னமான அஜ்மேரி கேட் பக்க நிலைய கட்டடம் ஆகியவை இவரால் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டது. புது தில்லி ரயில் நிலையத்தை உலகத் தரம் வாய்ந்த நிலையமாக மறுவடிவமைப்பு செய்வதற்கான திட்டமிடலில் அவர் முக்கிய நபராக செயல்பட்டார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments