மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி!
மணமேல்குடி   ஒன்றியத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சி தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும்  பயிற்சியினை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு ஜீவானந்தம் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் மற்றும் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் திரு செழியன் மற்றும் திருமதி இந்திரா ராணி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் பயிற்சி பாடவாரியாக தமிழ் ஆங்கிலம் கணிதம் ஆகிய பாடங்களில் பயிற்சி வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு அடிப்படை திறன்களை வளர்ப்பதற்காக ஒவ்வொரு பாடத்திற்கும் கற்றல் கற்பித்தல் உபகரணங்களை கொண்டு மாணவர்கள் எளிதில் கற்பதற்கும்..
ஊக்கப்படுத்துவதற்கும் பயிற்சியில் பாடவாரியாக வழங்கப்பட்டது.

இப்ப பயிற்சியில்  ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் கருத்தாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments