கோட்டைப்பட்டினம் பகுதியில் புதிதாக வாரச்சந்தை ஒன்றிய குழு தலைவர் பரணி கார்த்திகேயன் திறந்து வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மாவட்டத்திலேயே பெரிய ஊராட்சியாகும். இந்த பகுதியில் வாரச்சந்தை வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் ஊராட்சி மன்றம் முயற்சி மேற்கொண்டு கோட்டைப்பட்டினம் பகுதியில் சந்தை அமைக்க மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து வாரச்சந்தைக்காக இடம் தேர்வு செய்யப்பட்டு சுமார் ரூ.10 லட்சம் செலவில் சந்தை கூடம் மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டு வாரச்சந்தை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. 

புதிதாக தொடங்கப்பட்ட சந்தையை மணமேல்குடி ஒன்றிய குழு தலைவர் பரணி கார்த்திகேயன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் கதிஜா அம்மாள், துணைத்தலைவர் அக்பர் அலி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் (வடக்கு) சக்தி ராமசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கலைமணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜன்னத் பீவி சேர்க்கான், பெனாசிர் கலந்தர் நைனா முகமது, சங்கர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். புதிய சந்தை தொடக்க விழாவை முன்னிட்டு சந்தைக்கு வந்த பொதுமக்கள் சுமார் 3 ஆயிரம் பேருக்கு ஒரு கிலோ பல்லாரி இலவசமாக வழங்கப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments