புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தொடர்பாக செல்போனில் புகார் தெரிவிக்கலாம்




புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பரிசு வினியோகம் தொடர்பாக செல்போனில் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் பண்டிகைக்காக பொது வினியோக திட்ட அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்புடன் ரூ.1,000 ரொக்கப்பணம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்க அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகள் மூலமாக வருகிற 9-ந் தேதி முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில், புழக்கத்தில் உள்ள 4,90,338 அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு (இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்கள் உள்பட) தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மின்னணு குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் எவர் சென்றாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்படும். எனவே, ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே பொருள் பெற்றுச் செல்ல வர வேண்டும்.

கட்டுப்பாட்டு அறை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் வழங்கும் பணியை குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி சீராக வினியோக செய்வதை கண்காணிக்க கலெக்டர் அலுவலகத்திலும், வட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே மின்னணு குடும்ப அட்டைதாரர்கள் கீழ்குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்களிலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1967 மற்றும் 1800 425 5901 என்ற எண்களிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான தகவல்கள் ஏதுமிருப்பின் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்- 9445000311, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட கலெக்டர், அலுவலகம் 04322- 221577, துணை பதிவாளர் -9443017471, தனிவட்டாட்சியர் (பறக்கும் படை) - 9445045622 ஆகும்.

தனி தாசில்தார்கள்

தாலுகா வாரியாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, தனி தாசில்தார் புதுக்கோட்டை- 9445000312, ஆலங்குடி தனி தாசில்தார்- 9445000313, கந்தர்வகோட்டை வட்ட வழங்கல் அலுவலர்- 9445000315, கறம்பக்குடி வட்ட வழங்கல் அலுவலர்- 9445000405, திருமயம் வட்ட வழங்கல் அலுவலர்- 9445000316, அறந்தாங்கி தனி தாசில்தார்- 9445000317, ஆவுடையார்கோவில் வட்ட வழங்கல் அலுவலர்- 9445000318, மணமேல்குடி வட்ட வழங்கல் அலுவலர்- 9445000320, இலுப்பூர் வட்ட வழங்கல் அலுவலர்- 9445000319, விராலிமலை வட்ட வழங்கல் அலுவலர்- 9080487553, பொன்னமராவதி வட்ட வழங்கல் அலுவலர் 9445000404, குளத்தூர் வட்ட வழங்கல் அலுவலர்- 9445000314.

மேற்கண்ட தகவலை கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments