அன்னவாசல் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.1¼ லட்சம் மோசடி ஒருவர் மீது வழக்கு
அன்னவாசல் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்தை மோசடி செய்ததாக, ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குவைத்திற்கு அனுப்புவதாக...

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே மரிங்கிப்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் விசு (வயது 32). இவரும், சென்னை அடையார் பகுதியை சேர்ந்த சாகுல்அமீது என்பவரும் சென்னையில் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

அப்போது இருவரும் நண்பராக பழகி வந்தனர். இந்தநிலையில் விசுவை குவைத் நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறிய சாகுல் அமீது கடந்த 2020-ம் ஆண்டு பல தவணையாக ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்தை விசுவிடம் இருந்து பெற்றதாக கூறப்படுகிறது. விசு, பலமுறை சாகுல் அமீதுவிடம் வெளிநாடு அனுப்ப கோரியும் அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

வழக்குப்பதிவு

பின்னர் வெளி நாட்டுக்கு அனுப்பாததால், தனது பணத்தை திருப்பித் தருமாறு சாகுல் அமீதுவிடம் பலமுறை விசு கேட்டுள்ளார். ஆனால் சாகுல் அமீது பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக கூறியவர் இதுநாள் வரைக்கும் திருப்பி கொடுக்க வில்லை எனக்கூறப்படுகிறது.

இதையடுத்து, தன்னிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய சென்னை அடையார் பகுதியை சேர்ந்த சாகுல்அமீது மீது நடவடிக்கை எடுப்பதுடன், அவரிடமிருந்து தனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என விசு அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments