தொண்டி பேரூராட்சியில் மக்கும் குப்பையில் உரம் கிலோ ரூ.5க்கு விற்பனை




தொண்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும், மக்காத குப்பை சேகரிக்கபடுகிறது. பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் குப்பை பூங்கா அருகே கொட்டப்பட்டு அங்கு சமைத்த மற்றும் சமைக்காத உணவு வகைகள், பழங்கள் மற்றும் பூ கழிவுகள், உதிர்ந்த இலைகள் போன்றவற்றை மக்கும் குப்பையாகவும், பாலீதின் கழிவுகள், காகிதங்கள், மர வகைகள், உலோகங்கள், கண்ணாடி, கம்பிகள், தோல் பொருட்கள், அட்டைபெட்டிகள், பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், பால் கவர்கள் உள்ளிட்டவற்றை மக்காத குப்பையாக தரம் பிரிக்கப்படுகிறது. பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு கூறுகையில், துாய்மை பணியாளர்கள் வீடு தேடி வரும் போது குப்பையை ஒப்படைக்க பொதுமக்களிடம் வலியுறுத்தபட்டுள்ளது. மக்கும் குப்பை தரம் பிரிக்கப்பட்டு அதில் மாட்டு சாணத்தை சேர்த்து இயற்கை உரமாக தயாரித்து கிலோ ரூ.5க்கு விற்கப்படுகிறது.

மக்காத குப்பையை மறுசுழற்சி செய்து துாய்மை பணியாளர்களிடம் கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் தொகையை ஊக்க தொகையாக அவர்களுக்கே வழங்கப்படுகிறது, என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments