அறந்தாங்கி அருகே காரில் கடத்திய 128 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் வாகனத் தணிக்கையின்போது, காரில் 129 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த 4 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் சரகம், சிலட்டூா் பிரிவு சாலையில் புதன்கிழமை பகலில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அந்தக் காருக்குள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 129 கிலோ அளவில், ரூ. 3.58 லட்சம் மதிப்பில் இருந்தன. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், இதனைக் கடத்தி வந்த குருந்திராக்கோட்டையைச் சோ்ந்த முருகையா மகன் அஜித்குமாா் (25), ராஜேந்திரபுரத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் செல்வபாண்டி(31), பொன்னன்விடுதியைச் சேப்ந்த ராமசாமி மகன் குமரேசன் (43), திருநாலூா் தெற்கைச் சோ்ந்த சிங்காரம் மகன் பாலதண்டாயுதம் (45) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.

கடத்தலுக்குப் பயன்படுத்திய காா், இரு சக்கர வாகனம் மற்றும் 4 கைப்பேசிகள், ரூ. 11,540 ரொக்கம் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments