ஆர்.புதுப்பட்டினத்தில் 74வது குடியரசு தின விழா
74வது குடியரசு தின விழா நிகழ்ச்சி ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆர்.புதுப்பட்டினம் ஜமாஅத் தலைவர் பிரியம் J காதர்  தலைமை தாங்கினார்ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் GK.மனோகரன், ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் அல் அமீன் நிர்வாகிகள்  முன்னிலை வகித்தார்கள்.

நிகழ்ச்சியில் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் பொறியாளர்A.கலந்தர் பாட்ஷா வரவேற்புரை நிகழ்த்தினார். கிராம நிர்வாக அலுவலர் பிரபு அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்து தேசியக்கொடி ஏற்றி சிறப்பித்தார்கள். அல் அமீன் ஆலோசனை குழு உறுப்பினர் பொறியாளர் S.அஜ்மல் கான் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
முடிவில் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் ஆலோசனை குழு  உறுப்பினர்  A. நவாஸ் கான் நன்றி கூறி நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments