ஆவுடையார்கோவில் அரசு கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதற்கு ஆவுடையார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் உமாதேவி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரேணுகாதேவி, உதவி திட்ட அலுவலர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராமப்புற இளைஞர்களுக்கு சுயவேலை வாய்ப்பு தரும் பயிற்சி மைய பயிற்றுனர் முத்துக்கிருஷ்ணன், வட்டார இயக்க மேலாளர் ஜெயந்தி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். இந்த வேலை வாய்ப்பு முகாமில் 45-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை தேர்வு செய்தனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments