கோபாலப்பட்டிணத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கிய கோபாலப்பட்டிணம் ஜமாத் தலைவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே 
கோபாலபட்டினத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி கவிதா ராமு அவர்களை சந்தித்து மனு வழங்கிய கோபாலபட்டினம்  ஜமாத் தலைவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் 
புதுக்கோட்டை  மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி கவிதா ராமு அவர்களை ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி கோபாலபட்டினம் ஊர் முக்கியஸ்தர்கள்,ஜமாத் தலைவர்கள் A.S.M செய்யது முகம்மது O.S.M முகம்மதுஅலிஜின்னா,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் எம்.எஸ் எம்.ஷேக்முகம்மது,மாவட்ட தலைவர் ஹாஜி டாக்டர் எஸ்.எ.முகம்மது அஷ்ரப்அலி,சி.பி.எம்.மாவட்ட குழு உறுப்பினர் சங்கர்,ஒன்றிய செயலாளர் நெருப்பு முருகானந்தம்,மீமிசல் கிளை சி.பி.எம்.செயலாளர்ச எ.அமீர்,சி.பி.எம்.எம்.எஸ்.கலந்தர் உள்ளிட்ட பிரமுகர்கள் சந்தித்து 

கோபாலபட்டினத்தில் கவனிக்கப்பட வேண்டியசாலைகள் ,சாக்கடைகள்,குடிநீர்வசதி,போன்ற முக்கியமான பணிகளை செய்ய மாவட்ட ஆட்சிதலைவர் ஆவன செய்ய வேண்டுமென்ற கோரிக்கை மனுவை வழங்கினார்கள்,மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சிதலைவர் அவர்கள் எல்லாவற்றையும் விளக்கமாக கேட்டபின் நானே நேரில் வந்து ஆவன செய்கிறேன் என்ற உறுதியளித்தார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments