புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே அரசநகரிபட்டினத்தை சேர்ந்த 23 வயதான சட்டக் கல்லூரி மாணவர் அசாருதீன். இவர் 23.01.23 திங்கட்கிழமை இரவு படிப்பு சம்பந்தமாக மதுரைக்கு சென்று வந்தார். இவர் மீமிசல் பேருந்து நிலையத்தில் பேருந்தில் இறங்கி அவரது நண்பரோடு சேர்ந்து கடவுசீட்டு (பாஸ்போர்ட்) போலீஸ் விசாரணை சம்பந்தமாக காவல் நிலையத்திற்கு இரவு 8 மணி அளவில் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார்.
அந்த நேரம் மழை பெய்தது. அப்போது பைக் பழுதாகி மீமிசல் ஆவின் பால் கடை அருகில் நின்று விட்டதாகவும் பல முறைக்கு மேல் தனது இரு சக்கர வாகனத்தை காலால் உதைத்து ஸ்டார்ட் செய்ய பார்த்திருக்கிறார் ஸ்டார்ட் ஆகவில்லை. அதன் பல முயற்சிக்கு பின் பைக் ஸ்டார்ட் ஆனதும் ஊருக்கு சென்று உள்ளார்.
பின் தேநீர் கடையில் தேநீர் அருந்திவிட்டு தேநீர் கடையில் தேநீருக்கு காசு கொடுக்க பார்க்கும்போது பின்பக்கத்தில் வைத்திருந்த மணிபர்சை காணவில்லை. அதில் நாலாயிரம் ரூபாய் பணம், ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டர் ஐடி, காலேஜ் ஐடி, டிரைவிங் லைசன்ஸ் மற்றும் 8 ஆவணங்கள் இருந்தது.
இதை தொலைந்து விட்டது என்று பதறிக் கொண்டு மீமிசலுக்கு உடனே 9.00 மணி அளவில் வந்திருக்கிறார். வந்து பார்த்தபோது பைக் பழுதாக இந்த இடத்தில் தேடிப் பார்த்தபோது அவர் பின்பக்கத்தில் பர்சோடு வைத்திருந்த சீப்பு மட்டும் கிடைத்திருக்கிறது. உடனே காவல் நிலையத்திற்கு போய் சிசிடிவி கேமராவை பார்க்க வேண்டும் என்று முறையிட்டு இருக்கிறார். மேலும் அது தொடர்பாக மனுவும் கொடுத்தள்ளார்.
காவல்நிலையத்தில் காலையில் வாருங்கள் என்று சொல்லி அனுப்பி இருந்திருக்கிறார்கள். அதேபோல் அவர் வீடு திரும்பி 10 மணியளவில் அவர்களின் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்த மொபைலை ஆன் செய்கிறார் அப்போது மூன்று முறை யாரோ தெரியாத நபரிடம் இருந்து அலைப்பு வந்திருக்கிறது அந்த எண்ணிற்கு திரும்ப அலைத்த போது உங்கள் தொலைந்து போன மனிபர்ஸ் பாலத்துக்கு கீழே கிடந்தது என்று கூறி வாருங்கள் நான் வேலைக்கு போகும் போது தருகிறேன் என்று கூறிவிட்டு சரியான ஆவணங்களின் விபரங்களை கூறி பெற்றுக்கொள்ளுமாறு கூறினார் சரியான விபரத்தை கூறி உரியவர் பெற்றுக்கொண்டார்.
ஒப்படைத்தவர் பற்றி விசாரிக்கையில் அவர் பெயர் சரத்குமார் என்றும் ஊர் மீமிசல் அருகே செய்யானம் என்றும் அன்றாடம் கூலி வேலை செய்யக்கூடியவர் என்பதும் தெறிய வந்தது கஷ்டமான நிலையிலும் அடுத்தவரின் பணத்திற்கு ஆசை படாத அந்த கூலி தொழிலாளி ஒரு நயா பைசா கூட எடுக்காமல் அப்படியே முழுமையான பணத்தையும் ஒப்படைத்ததும் அல்லாது அவருக்கு சன்மானமாக கொடுத்த பணத்தையும் வாங்க மறுத்த அவர் இது ஒரு உதவி என்று கூறி சென்று விட்டார்
இந்த காலத்திலும் இதே போல் நல்லவர்களை சந்திக்கையில் மகிழ்ச்சிக்கு தரக்கூடிய விஷயமாக இருக்கிறது.
அதேபோல் வழக்கு தொடர்ந்த சட்ட கல்லூரி மாணவன் தன்னுடைய பர்ஸ் கிடைத்து விட்டது என்று அந்த வழக்கை காவல் நிலையம் சென்று திரும்ப பெற்றுக் கொண்டார் .
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.