திருப்பெருந்துறை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ரூ.28½ லட்சத்தில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா
ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், திருப்பெருந்துறையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தில் 2 வகுப்பறைகள் கட்டுவதற்காக ரூ.28 லட்சத்து 50 ஆயிரத்தில் கட்டிங்கள் கட்டும் பணியை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழுத் தலைவர் உமாதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழச்செல்வன், ஒன்றியகுழு உறுப்பினர்கள் பாலசுந்தரி கூத்தையா, கருப்பூர்செந்தில்குமரன், திருப்பெருந்துறை ஊராட்சி தலைவர் சந்திரா ராஜமாணிக்கம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் லெட்சுமிகாந்தன் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments