ரூ. 28.5 லட்சத்தில் ஆர்.புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் விழா!
    மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.28.5 லட்சத்தில் கட்டப்பட உள்ள புதிய வகுப்பறைகள் கட்டிட அடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.

ஆவுடையார்கோவில் தாலுகா, நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட  ஆர்.புதுப்பட்டினம் முஸ்லீம் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா ஒன்றிய குழு உறுப்பினர் அய்யா ரமேஷ் , ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் அபுதாஹீர் ஆகியோர் முன்னிலையில், ஜமாத் தலைவர் பிரியம் காதர் தலைமையில்  15.02.2023 அன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் மனோகரன் மற்றும் ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments