இலுப்பூரில் உள்ள நிலையில் காரைக்குடியில் மோட்டார் சைக்கிளில் சென்றதாக அபராதம் விதிப்பு குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளி
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பள்ளிவாசல்காடு பகுதியை சேர்ந்தவர் முகமதுஅசாருதீன். தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு இலுப்பூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து போலீசாரிடம் ஒரு புகார் கூறினார். அதில் எனது செல்போனில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளதாகவும், அதில் நான் இன்று (அதாவது நேற்று) 3 பேருடன் காரைக்குடியில் மோட்டார் சைக்கிளில் சென்றதாகவும், அதற்கு எனக்கு காரைக்குடி போக்குவரத்து போலீசார் ரூ.1,000 அபராதம் விதித்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் எனக்கு காலில் அடிபட்டு ஒருமாத காலமாக வீட்டில் ஓய்வில் இருக்கின்றேன். எனக்கு சம்பந்தம் இல்லாமல் ரூ.1,000 அபராதம் கட்ட வேண்டும் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது என்று கூறினார். 

இதையடுத்து போலீசார் இதுகுறித்து விசாரித்து சொல்வதாக கூறியுள்ளனர். இதில் திருப்தி அடையாத முகமதுஅசாருதீன், இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அப்போது போலீசார் காரைக்குடி போக்குவரத்து போலீசாரை தொடர்பு கொண்டு இதுகுறித்து விளக்கம் கேட்டு சொல்வதாக கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments